பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

து

து

உத்தேசிக்கப்பட்டிருந்தது. அவைகள் இப்பொழுது பிரிந்து போய்விட்டபடியால் அவை 360-க்குக் குறைந்து போய் விட்டது என்பதை மட்டும் கனம் அங்கத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி : “உழவனுக்கு" என்கின்ற அரசினர் நூலில் வந்த செய்தியும் புள்ளி விவரங்களையும் வைத்துக்கொண்டுதான் நான் சொன்னேன். பரவாயில்லை இந்த 360 விதைப் பண்ணைகளை வைத்துக் கொண்டு நல்ல விதைகளைக் கொடுக்க முடியும் என்று கனம் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அது எந்த அளவில் விவசாயிகளுக்குச் சேரப் போகிறது எந்த அளவில் அவர்கள் அனுகூலம் அடையப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. விவசாயிகளும், மற்றும் தொழிலாளர்களும் இந்த மானியத்தில் உள்ளடங்கி இருக்கும் மீனவர்களும் எந்த அளவில் பயனடையப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பனிக்கட்டியானது ஒருவருடைய கையிலிருந்து பத்துப் பேருடைய கைக்கு மாறும்போது கடைசியில் போய்ச் சேருபவர் கையில் ஒன்றும் இல்லாமல் போய் விடும். அந்த அளவில்தான் இந்த விதைகளையும், கடனையும், விவசாயக் கருவிகளையும் விநியோகம் செய்யும் முறை ஆகிவிடுகிறது. இடையே உள்ளவர்கள் அந்த அளவுக்கு அவைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ரி

விவசாயக் கல்லூரி ஒன்று கோவையில் இருக்கிறது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 1956-57-ல் மட்டும் இந்தக் கல்லூரிக்கு என்று 7 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்று அரசாங்கச் செய்தித்துறை வெளியிட்டுள்ள “உழவனுக்கு” என்ற நூலில் 24-ம் பக்கத்தில் பார்த்தேன். ஏழு லட்சம் ரூபாய் அதற்கு என்று செலவிடப்பட்டதாக இருந்தால் உள்ளபடியே அதைக் கண்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான். இந்த ஆண்டு கனம் நிதி அமைச்சர் அவர்கள் விவசாயக் கல்லூரித் துறைக்கு 5.96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 1956-57ல் ஏழு லட்சம் ரூபாய் விவசாயக் கல்லூரிக்கு ஒதுக்கிவிட்டு இப்பொழுது ஐந்து லட்சத்து சொச்சம் ரூபாய் ஒதுக்குவதாக இருந்தால் அதைக் கண்டு நாம் பூரிப்பு அடையக்கூடிய நிலையில் இல்லை என்பதை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.