பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

25

முந்திரித் தொழிலைப்பற்றி நான் சிறிது கூற விரும்புகிறேன். அடிக்கடி நான் முந்திரித் தொழிலைப்பற்றி குறிப்பிடுகிறேன் என்று நினைக்க வேண்டாம் - முந்திரித் தொழில் சம்பந்தமாக இங்கே ஒன்றைக் எடுத்துக்காட்டாமல் இருக்க முடியாது. நல்ல காரியத்திற்காகவே நெய்வேலிப் பகுதியில் பல முந்திரிக் காடுகளை உற்பத்தி செய்வதற்கும் முந்திரி பயிரிடுவதற்கும் புதிய புதிய இடங்களைத் தேடி அலையாமல் நெய்வேலியில் முந்திரிக்காடு அழிக்கப்படுவதால் பாதிக்கப்படுகிறவர்களிடம் நஷ்டஈடு கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு அவர்களே இடத்தை வாங்கி பயிரிடுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை கனம் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு

அமைச்சர்

கடந்த மாதத்தில் நான் விழுப்புரம் சென்றிருந்தேன். அப்பொழுது புகைவண்டி நிலையத்திற்குப் பக்கத்தில் ஒரு புதிய ஆலை இருப்பதைப் பார்த்தேன். அது என்ன என்று கேட்டதற்கு மணிலாவிலிருந்து வனஸ்பதியைக் தயாரிக்கக் கூடிய ஆலை என்று கூறினார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தினிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி வனஸ்பதி உற்பத்தி செய்வதற்கு என்று ஆலையை அமைத்தார்கள் என்றும் அப்படி கடனைப் பெற்று ஆலையைக் கட்டினார்கள் என்றும், 6 கட்டிடங்களைக் கட்டிவிட்டு இயந்திரங்களை வரவழைத்து அவைகளையும் அங்கு அமைத்தார்கள் என்றும் அதன் பிறகு அந்த ஆலை வேலை செய்யவில்லை என்றும் சொன்னார்கள். கட்டிடங்கள் கட்டி இயந்திரங்களை அமைத்து ஆலை வேலை செய்யவில்லை என்பதோடு "வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே, பாதாள மூலி படருமே" என்ற பழைய பாடல் ஒன்றை, ஞாபக மூட்டுவதாகவும் இருக்கிறது அந்த இடம் ! கட்டிடம் சீரழிந்து சிறப்பு அழிந்து இயந்திரங்கள் துருப்பிடித்துப்போன நிலையில் காணப்படுகின்றன. இதை உடனடியாகக் கவனித்து அந்த வனஸ்பதி ஆலைக்கு மீண்டும் புத்துயிர் அளித்து அதனால் அங்கு விளையும் மணிலா அங்குள்ளவர்களுக்கு உள்ளபடியே பயனளிக்கக் கூடிய நிலையை உண்டாக்கி அதன் மூலம் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களை ல் பயனடையச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அங்குள்ள தொழிலாளப் பெருமக்கள் அரசாங்கத்தை வாழ்த்துவார்கள் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.