பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

நேற்றைய தினம் அமைச்சர் அவர்களுடைய உரையில் வேறு ஒரு உரையிலும் காணப்படாத ஒரு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் ஆண்டுதோறும் முத்துக் குளித்தல் நடைபெறும் என்றும், அதனால் அரசாங்கம் கணிசமான வருமானத்தைப் பெறலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அமைச்சர் அவர்களுக்கு, கனம் சபாநாயகர் வாயிலாக, ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 1524-ம் ஆண்டில் போர்த்துகீசியர் இந்த நாட்டிலே வந்த காலத்திலே கன்யாகுமரியில் முத்து எடுக்கும் தொழில் மிக மிகச் சிறப்பாக நடைபெற்றது என்றும், அதற்குப் பிறகு பிரிட்டிஷார் ஆதிக்கத்தின்கீழ் இந்த நாடு வந்த பிறகு மதுரை நாயக்கர்களும், இராமனாதபுரம் ராஜாக்களும், எட்டையபுரம் ராஜாக்களும் அந்தத் தொழிலை அங்குள்ள மீனவர்களைக் கொண்டு திறம்பட நடத்தினார்கள் என்றும் சரித்திரத்தில் பார்க்கிறோம். இன்றைய தினம் கூட, கன்யாகுமாரி முனையிலிருந்து இராமேசுவரம் வரையுள்ள கடற்பரப்பில் நல்ல முத்துச் சிப்பிகள் விளையும் பாறைகள் ஏராளமாக இருக்கின்றன என்றும், பரிசீலனை நடத்தினால் நல்ல முத்துகளைப் பெறலாம் என்றும் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலோர் கூறுகிறார்கள், அதையும் ல் கவனித்தால், கிரேக்கம் யவனம் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழகத்தின் பெருமையை எப்படி முத்துக்கள் அன்றொரு நாள் உயர்த்தினவோ, அதைப் போல இன்றும் தமிழகத்தின் பெருமையை வெளிநாடுகளில் உயர்த்துவதற்கு அவைகள் பயன்பெறும் என்று நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

ல்

விவசாயத்திற்கு மிக முக்கியமானவை விதை, ரசாயன எரு என்பதோடு மாத்திரம் அல்ல ; நீர்ப்பாசனம் என்பதோடு மாத்திரம் அல்ல விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிற விவசாயிகளும் முக்கியமானவர்கள் என்பதையும் நான் இங்கே எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். விவசாயிகள் வளத்தோடு வாழ்ந்தால்தான், அவர்களுடைய வியர்வை துடைக்கப்பட்டு, அவர்களுடைய கண்ணீர் துடைக்கப்பட்டு களிப்பு ஏற்பட்டால்தான் விவசாயம் நல்ல முறையிலே நாட்டில் பெருக முடியும் என்பதையும் விவசாய அமைச்சர் அவர்கள் உணராதவர் அல்ல.