பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

ம்

27

ஆனால், குறிப்பாக, என்னுடைய குளித்தலைத் தொகுதியைப் பற்றி ஒன்று கூற விரும்புகிறேன். அங்கே இருக்கும் நங்கவரம் பகுதியில் விவசாயத் தொழிலாளர்கள் “முச்சலிகா” என்று அடிமை முறிச் சீட்டுகள் ஆட்பட்டு, அந்த அடிமை முறிச் சீட்டை 10,15 ஆண்டுகளுக்கு முன் அம்மாதிரி எழுதிக்கொடுத்திருந்த காரணத்தால், இன்றைய நியாய வாரச் சட்டத்தின் விளைவைத் துர்விநியோகப்படுத்துகிற வாக்குவன்மை படைத்த வழக் கறிஞர்களும், மற்றவர்களும், மிராசுதார்களும் அந்த விவசாயிகோர்ட்'-டிலும் வேறு கோர்ட்களிலும் நடக்கும் வழக்குகள் 300-க்கு மேல் ஏற்பட்டு விட்டன. அங்கு இருக்கும் மிராசுதார்கள் விவசாயிகளுக்குச் சொல்லி விட்டார்கள்" நடைபெரும் 300 வழக்குகளும் விசாரிக்கப்பட்டு முடிவு கூறிய பிறகுதான் நீங்கள் எல்லாம் எங்களுடைய நிலத்தில் இறங்க வேண்டும் ; அது வரை கூலி அடிமை முறையில் சீட்டு எழுதி கொடுத்துவிட்டுத்தான் இறங்கவேண்டும்" என்று. அதன் காரணமாக இன்றைய தினம் விவசாயிகள் நிலத்திலே இறங்குவதற்கு அஞ்சி இருக்கிறார்கள் - நிலத்திலே இறங்கினால்

8

கைது செய்யப்படுவோம் என்ற பீதியுடன். மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது சென்ற ஞாயிற்றுக்கிழமை, நடந்த நிகழ்ச்சியொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். குளித்தலையில் நிகழ்ந்த விவசாயிகள் கோரிக்கை தினத்தன்று காலையில் 8 விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த அளவு நிலத்திலே இறங்கின விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே நிலைமை நீடிக்குமானால் 8 ஆயிரம், 9 ஆயிரம் ஏக்கரா நிலத்தில் சாகுபடி நின்றுவிடக் கூடிய நிலைமையும், விவசாயம் ஒழுங்காக நடைபெற முடியாத நிலைமையும் குளித்தலைத் தொகுதியில் நங்கவரம் பகுதியில் ஏற்படும் என்றும் கழனிகள் ம் களங்களாகும் என்றும் கூறி, இத்தகைய விவசாயிகளுடைய நிலைமை பரிசீலிக்கப்பட்டு, அவர்களுக்கு உடனடியாக உதவி செய்தோமானால், விவசாயம் செழிப்படையச் செய்தவர் களாகவும், விவசாயிகளுடைய தேவையை நாம் உணர்ந்தவர் களாகவும் ஆவோம் என்று குறிப்பிட்டு என்னுடைய வார்த்தையை முடித்துக்கொள்ளுகின்றேன்.

வி