பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

29

பெருக்கும் மிகுந்துள்ள இந்த நேரத்தில் நாம் செய்கின்ற நீர்வளத் திட்டங்களையும் எண்ணிப் பார்க்கும்போது அதையும் இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது - மிக மிக குறைந்த அளவில் தான் நம்முடைய வேலைகள் நடைபெற்றிருக்கின்றன என்று கூற விரும்புகிறேன்.

,

வைகளுக்கு எல்லாம் காரணம் என்ன என்று கூறும் போது - வரவு செலவு அறிக்கையில், நிதி அமைச்சர் அவர்கள் உரையிலும், இந்த நீர்ப்பாசன மானியத்தை கோரியிருக்கின்ற அமைச்சர் திரு. கக்கன் அவர்கள் தந்திருக்கிற அறிக்கையிலும் - குறிப்பிடப்படுகிற ஒரே ஒரு காரணம் இயற்கையின் இடையூறுகள் நமக்குப் டெ பரும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதுதான். இயற்கையான வசதிகள் இல்லாத காரணத்தினால் நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட முடியவில்லை என்கிறார்கள். அதே நேரத்தில் நீர்ப்பாசன வசதியைப் பெருக்குவதற்கான வழித்துறைகள், அதற்கேற்ற இயற்கை வசதிகள் நம் மாநிலத்தில் எங்கெங்கே கிடக்கின்றன என்பதையும், அவற்றை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் 6 என்பதையும் பற்றி பல முறை இந்தப் பேரவையில் பல அங்கத்தினர்களால் எடுத்துச் சொல்லப்பட்டு வந்தும் கூட அவை கவனிக்கப்படவில்லை என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

சேலம் மாவட்டத்தில் சேர்வராயன மலையிலுள்ள வட பகுதியில் வாணியாற்றில் அணை கட்டப்படுமானால் ஹரூர் தாலூகா முழுவதும் பாசன வசதி பெறும் என்பதாக அந்தப் பகுதி மக்கள் பல பல மனுக்கள் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அந்தத் திட்டத்திற்கு சர்வே செய்யப்பட்டு ஒரு லட்சத்திற்கு மேல் செலவு ஆகியிருந்தும் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதா, இல்லையா என்ற சந்தேகக் குறியோடு நின்று இருக்கிறது என்று குறிப்பிட விரும்புகிறேன்.

புதுக்கோட்டைப் பகுதியில் அக்கினியாறு, கோரையாறு, வெள்ளாறு, குண்டாறு போன்ற காட்டாறுகள் ஓடுகின்றன. அப்படி ஓடுகின்ற காட்டாறுகளை அந்தப் பகுதியிலுள்ள நிலங்களுக்குப் பாசன வசதி கொடுக்கும் வகையில் தடுத்துத் தேக்க சில திட்டங்கள் சொல்லப்பட்டன. அக்கினியாற்றுக்கு