பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

அணை கட்டினால் அந்தப் பகுதி நல்ல செழிப்பும், பசுமையும் அடையும் என்று அந்த வட்டாரத்து மக்கள் என்னைக் காணுகின்ற போதெல்லாம் சொல்கிறார்கள். அந்த வட்டாரத்திலுள்ள மந்திரி அவர்களைச் சந்தித்தும் கூறியிருக்கிறார்கள். 1950-ம் ஆண்டு என்று எனக்கு நினைவு-கனம் பக்தவத்சலம் அவர்கள் அக்கினியாறு திட்டத்தைப் பார்வையிட்டு, வழி முறைகளை எடுத்துக் கூறி, தண்ணீர் கணக்கு இவைகளையெல்லாம் போட்டு திட்டத்தை உருவாக்க நல்ல முயற்சி எடுப்பதாக கூறியிருக் கிறார். ஆனாலும் இன்றைக்கு அந்த முயற்சியும் கைவிடப்பட்டு விட்டதா, இல்லையா என்ற சந்தேகக் குறியோடு நின்று இருக்கிறது என்று குறிப்பிட விரும்புகிறேன்.

நெல்லை மாவட்டத்திலிருந்து வந்திருக்கிற மதிப்பிற் குரிய நண்பர்கள் பேசியிருக்கிறார்கள். கீரியாறு, வேம்பாறு, பம்பையாறு முதலிய நல்ல பல திட்டங்களை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அந்தத் திட்டங்களை நிறைவேற்ற அரசினரின் முயற்சியை எதிர்பார்த்துத் தவங்கிடக்கின்றனர் என்று கூற விரும்புகிறேன்.

ல்

ரி

தென்னாற்காடு மாவட்டத்தில் கோமுக நதித் திட்டம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. வடவாறு சீர்திருத்தம் செய்யப்படவில்லை. பனமலை ஏரி திட்டம் நிறைவேற்றப் படவில்லை. அதோடு தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள நந்தன் கால்வாய் திட்டம், நந்தன் பெயர் பெற்ற அந்த மாவட்டத்திலே, நந்தன் பரம்பரைப் புகழை நிலைநாட்ட அந்தப் பரம்பரையில் இருந்தே வந்துள்ள அமைச்சர் அவர்கள் இன்னும் நிறைவேற்றாமலிருப்பதைக் கவனித்து உடனடியாகத் தக்க நடவடிக்கை வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

எடுக்க

இப்படி நம் மாநிலத்தில் இயற்கை வசதிகள் அதிகமாக இருந்தும் அவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடாமல், இயற்கை வசதி இல்லை என்று ஒரு வார்த்தையில் கூறி விடுகிறார்களே என்று வியப்படைகிறேன். அப்படிச் சொல்லி விடுவதின் காரணமாக நிறைவேற்றப்படவேண்டிய பல திட்டங்களை நிறைவேற்றாமல் விட்டு விடுகிறார்கள் என்று கூற விரும்புகிறேன்.

வடாற்காடு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் செய்யாறு அணைக்கட்டு, சதுப்பேரி, களம்பூர் ஏரி, வடவேடு