பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

31

ஏரி, கமண்டலநாக நதி திட்டங்கள் போன்ற பல திட்டங்கள் எடுத்துக் கூறப்பட்டும் கவனிக்கப்படவில்லை. குறிப்பாகவும், சிறப்பாகவும் என்னுடைய தொகுதியாகிய குளித்தலை பகுதியில் குடகநாறு திட்டத்தைப் பற்றி நான் மிக மிக விளக்கமாக பல முறை எடுத்துக் கூறியிருக்கிறேன். அந்தக் குடகனாறு திட்டத்தின் படி திண்டுக்கல் வட்டம் வேடசாந்தூருக்கு அருகேயுள்ள கல்வார்பட்டியில் ஒரு நீர்த்தேக்கம் கட்டி கீழ்ப் பக்கமாக சுமார் 20 மைல் நீள வாய்க்கால் வெட்டினால் என்னுடைய குளித்தலைத் தொகுதியில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதியைப் பெறும் என்று கூறியிருக்கிறேன். வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி கூட சர்வ கட்சித் தோழர்களைக் கொண்ட விவசாயி மகாநாட்டைக் கூட்டுவதாக இருக்கிறது. குடகனாறு திட்டத்தைப் பற்றி சென்ற ஆண்டு மந்திரி கக்கன் அவர்கள் சொல்லும்போது - சென்ற ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி என்று நினைவு - அமராவதி திட்டத்திற்குத் தண்ணீர் விடப்பட்டதும் அது கவனிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அமராவதி திட்டத்துக்கு தண்ணீர் விட்டாகி விட்டது. ஆகவே இதையும் கவனிக்க வேண்டுமென்று அமைச்சர் அவர்களைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

ம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரி பிரிவில் தூர்ந்து போயிருக்கிற வாய்க்கால்களை சென்ற பத்து ஆண்டு காலமாக- சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே - மராமத்து செய்யவில்லை. அந்தக் காவேரி கால்வாய்கள் வெட்டப்படுமானால் இன்னும் அந்தப் பிரதேசத்தின் வளம் அதிகமாகப் பெருக வழியேற்படும் என்று கூற விரும்புகிறேன்.

ம்

இவைகளையன்னியில் கிருஷ்ணா, கோதாவரி திட்டங் களுக்கு நம் சர்க்கார் செய்கிற முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இன்றைக்கு ஆந்திராவில் அந்நதிகளின் 10 சதவீதம் தண்ணீர்தான் உபயோகப்படுகிறது. அவர்களே அணை கட்டிக் கொண்டாலும் 40 சத வீதம் தான் அவர்களுக்கு பயன்படும் என்றும், மிச்சம் இருக்கிற 60 சத வீதம் வீணாகப் போகாமல் ம் தமிழக மாவட்டங்களுக்குப் பயன்படும் வகையில் செய்யலாம் என்றும் குறிப்பிட விரும்புகிறேன். அந்த வேலையை 'விரைவில்' செய்ய திட்டமிடவேண்டும். அது அமைச்சர் அவை விரைவில் என்று சொல்கிற வார்த்தைக்கு கொள்கிற புதிய