பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

பொருள் போல் இல்லாமல் 'சீக்கிரமாக' நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ர்

அது போலவே, சென்ற ஆண்டு பாலாறு திட்டத்தைப் பற்றி எங்கள் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் எந்த வகையிலே பாலாற்றில் இருக்கிற தண்ணீரை 'சப் சாயில் வாட்டர்' மூலம் எந்த அளவு நிறைவேற்ற முடியும் என்று எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அதுவும் இது வரையில் கவனிக்கப்படவில்லை. அதிலும் அமைச்சர் அவர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். பெரிய திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறும்போது 176 கோடி ரூபாய் செலவில் பக்ரா நங்கல் அணைக்கட்டுத் திட்டமும், 116 கோடி ரூபாய் செலவில் ஹீராகுட் திட்டமும், 140 கோடி ரூபாய் செலவில் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டமும், இது போன்று பல பல திட்டங்களுக்கு வழியில்லை, பெரிய திட்டங்களுக்கு இயற்கை வசதியில்லை என்று கூறும்போது நான் இங்கு ஒன்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர் அவர்கள், கங்கைத் தண்ணீர் குமரி வரையில் கொண்டு வரப்படுமானால் தென்னாடு வளம்பெறும் என்று ஒரு பெரிய திட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கள் தான் தென்னாடு பிரிய வேண்டுமென்று கேட்கிறீர்களே, அந்தத் தண்ணீரை அவர்கள் கொடுப்பார்களா என்று கக்கன் அவர்கள் விடை பகரக் கூடும். தென்னாடு பிரிய வேண்டுமென்று நாங்கள் கூறும்போது நட்புறவு முறைகளோடுதான் ஒரு நாடு இன்னொரு நாட்டில் இருந்து விடுதலை பெறவேண்டுமென்று கூறுகிறோமே தவிர நதி, வளங்கள் போன்ற பல வளங்களைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கங்கையில் வீணாகப் போகும் தண்ணீரை தென்னகத்திற்குக் கொண்டு வரும் முயற்சியை ஸர்.ஸி.பி. ராமசாமியின் 'ட்ரான்ஸ் கான்டினெட்டல் கனால்' திட்டத்தை வெகு விரைவிலே செய்து முடிப்பதற்கும், அதற்காகிற செலவை மத்திய அரசாங்கத்திலிருந்து கேட்பதற்கும் இந்த அமைச்சரவை துணிவு பெற வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக, வடக்குள்ள ராஜ்யங்களில் கட்டப்படுகிற அணைத் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் பண