பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

உரை : 4 4

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

கல்வி மானியம்

நாள்: 22.03.1961

கலைஞர் மு. கருணாநிதி : சட்ட மன்றத் துணைத் தலைவர் அவர்களே, கல்வி மானியத்தின் மீது தரப்பட்டுள்ள வெட்டுப் பிரேரணையை ஆதரித்து நான் என்னுடைய து கருத்துக்களை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவிலே ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்களின் தரம் பெரும்பாலும் மோசமானதாக இருக்கிறது, உள்ளடக்கம், அச்சு, அமைப்பு எல்லாமே மிகவும் மோசம் என்று நான் சொல்லவில்லை. டிசம்பர் மாதம் 28-ம் தேதி கான்பூரில் நடைபெற்ற அகில் இந்தியக் கல்வி மகாநாட்டிற்குத் தலைமை வகித்த நமது கல்வி அமைச்சர் திரு. சுப்ரமணியம் அவர்கள் எடுத்துக் காட்டியிருப்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கல்வியின் தரம் குறைந்திருப்பதற்குக் காரணம் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களின் அமைப்பும், உள்ளடக்கம் என்று சொல்லப்படுகிற பொருள் அடக்கமும் கூடத் தரக் குறைவானதாக இருக்கிறது என்பதை அம் மகாநாட்டில் நமது கனம் அமைச்சர் அவர்கள் சொன்னதோடு அல்லாமல் அதைத் திருத்துவதற்கு தக்க வழிவகைகளைக் காணவேண்டுமென்று நான் இந்த நேரத்தில் எடுத்துக் கூற விரும்புகிறேன். கல்வியின் தரம் குறைவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆசிரியர்களின் வாழ்க்கை நிலை சரியான அளவிற்கு உயர்த்தப்படாதது ஒரு காரணம். கல்வித்தரம் உயர வேண்டுமென்றால் ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாக வேண்டும். ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகமாக உயர்த்தியிருக்கிறோம் என்ற

ள்

ல்