பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

35

காரணத்தினால் மட்டும் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை

உயர்த்தியாகி விட்டது என்பதற்கு ஒரு சான்றாகக்

காட்டுவார்களேயானால், அதற்கு நான், அல்ல, டெல்லி பாராளுமன்றத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருக்கும் ஸ்ரீமாலி அவர்கள் ஆசிரியர்களுக்குக் கொடுத்துள்ள சம்பள உயர்வு, தற்போது ஏற்பட்டிருக்கும் பண்டங்களின் விலைவாசி உயர்வால் பயன்படாமல் போய் விட்டதென்று அண்மையில் குறிப்பிட்டுக் காட்டியிருப்பதை இங்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆசிரியர்களால் எப்படி மாணவர்களுக்கு நிம்மதியாகப் பயிற்சி அளிக்க முடியும் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பால் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதென்று பள்ளிகளில் போதித்து விட்டு வீட்டிற்குச் செல்கிற ஆசிரியர் தன் குழந்தை குட்டிகளுக்குப் பால் வாங்கித்தர வக்கற்ற நிலையில், வழியற்ற நிலையில், வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பள்ளிக்கூடத்தில் கரும் பலகையில் பால்காரி என்று எழுதிக் காட்டி, “பா,ல் ; கா, ரி," என்று எழுதிக் காட்டி மாணவர்களுக்குப் பாடம் போதிக்கின்ற நேரத்தில் திரும்பி பி வீட் டிறகு செல்லும்போது பால்காரி பழைய கடனைக் கேட்க காத்திருப்பாளே என்ற நினைவு அவர் உள்ளத்தில் தோன்றுமானால் அவர் போதிக்கும் பாடம் அத்துடன் தடைப்பட்டுப் போகும் என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை. இன்றைய தினம் ஆசிரியர்களுக்குத் தரப்படுகிற வேலை, மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்பது மட்டுமல்ல, இன்று ஆசிரியர்களுக்குப் பல பல வேலைகளை அரசினர் தந்திருக்கிறார்கள், சென்சஸ் எடுப்பது ஆசிரியர்களின் வேலையாக இன்றைய தினம் தரப்பட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியல் சேகரிப்பது ஆசிரியரின் வேலையாகத்

தரப்பட்டிருக்கிறது, கொடி விற்பனை செய்ய வேண்டியது அவர்களது வேலையாகத் தரப்பட்டிருக்கிறது. சிலவிடங்களில் பரிசுப் பத்திரங்கள் விற்க வேண்டிய நிலையும் இருக்கிறது, ஆசிரியர்களுக்கு. பள்ளிக்கூடச் சீரமைப்பிற்கு வேண்டிய சாமான்கள் சேகரிப்பது போன்ற இக்கட்டான நிலையில்

ருக்கிறார்கள் ஆசிரியர்கள். மதிய உணவுத் திட்டத்திற்குப் பொருள் பெறும் காரியத்தையும் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நான் இந்தக் காரியங்கள் வேண்டாமென்று கூறவில்லை. மதிய உணவு அளிப்பதும் பள்ளிச் சீரமைப்பும்