பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

எனறு

அத்தியாவசியமானவை என்பதை நான் உணர்ந்திருந்தாலும் அவைகளுக்காக நேரத்தைச் செலவிடும் ஆசிரியர்கள், பள்ளியில் பாடம் போதிக்கும் நேரத்தை கொள்ளை கொண்டு இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடவேண்டியவர்களாயிருக் கிறார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த ஏழெட்டு வேலைகளை ஆசிரியர்கள் பார்க்கும் போது, அவர்களுக்கு அதற்காகத் தனிச் சலுகைகள் தரப்பட்டாலும் கூட, தரப்படவில்லை எனக்குத் தெரியும், அப்படித் தரப்பட்டாலும் கூட இந்த வேலைகளைச் செய்து கொண்டு ம் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த அவர்களால் இயலுமா என்பதை மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் அவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று நான் பரிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்களுக்குப் பல இடங்களில் எப்படி போலீஸ்காரர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகிறதோ அதே போன்று ஆசிரியர்கள் கிராமங்களில் குடியேறி குடியிருப்பதற்கு வீடில்லாமல் தவிக்கும் நிலையில் அவர்கள் இன்று இருப்பதால் கிராமங்களில் ஆசிரியர்களுக்கு வீடு கட்டித் டு தருகிற திட்டத்தை இந்தச் சர்க்கார் செய்து தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பள்ளிகளின் கல்வித் தரம் உயர பாடப் புத்தகங்கள் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் ஆசிரியர்களின் நிலையும் உயர்வது அவசியம். அதே போன்று பள்ளி நிர்வாகமும் ஒரு முக்கிய பொறுப்பாகும். பஞ்சாயத்து யூனியன் கௌன்சில் உரையில் நமது கல்வியமைச்சர் அவர்கள் இந்த மாமன்றத்தில் கூறியதாக எனக்கு நினைவு, மாவட்டக் கழக உயர்தர ஆரம்பப் பள்ளிகளை பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்தில் விட்டு விட்டு, மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளை சர்க்காரே எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்திருப்பதாகவும் உயர்நிலைப் பள்ளிகளை சர்க்கார் நிர்வாகத்தில் நேரிடையாகக் கொண்டு வருவது சர்க்கார் திட்டம் என்று கனம் அமைச்சரவர்கள் கூறியிருப்பதாகக் கருதுகிறேன். ஆனால் அது எப்படி செயல்படுகிறது என்றால் அதற்கு ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன். தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியை, நான் கேள்விப்பட்டேன், திருவாரூரிலுள்ள ஒரு திடீர் காங்கிரஸ்காரர், ஒரு பணக்காரருக்கு அந்தப் பள்ளியைத் தனிப்பட்ட முறையில் மாற்றித் தருவதற்கான

ல்