பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

37

முயற்சிகள் வெகு வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. திருவாரூர் பொது மக்களும், சர்வ கட்சிக்காரர்களும் அந்த முறை கூடாது, அந்தப் பள்ளியை மாவட்டக் கழக நிலையிலிருந்து தனிப்பட்ட ஒருவரின் உரிமையாக மாற்றக் கூடாது என்றும், அவர் நில உச்ச வரம்பிலிருந்து தப்பித்துக் கொள்ள இக் காரியத்தை மேற்கொள்கிறார் என்றும் திருவாரூர் மக்கள் குரல் எழுப்புகிறார்கள். அதற்கிடையில்கூட அந்தப் பள்ளியைத் தனியார் நிர்வாகத்தில் விடுவதற்கான வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை நான் இங்கு ஞாபக மூட்ட விரும்புகிறேன். ஒரு காங்கிரஸ்காரருக்குக் கொடுக்கக் கூடாது என்று நான் கருதுவதாக கனம் அமைச்சர் அவர்கள் எண்ணினால் திருவாரூரில் நடை பெற்றுக் கொண்டிருக்கிற நகராண்மைக் கழகம் காங்கிரஸ் காட்சியின் தலைமையில்தான் நடைபெறுகிறது, அந்தக் கழகம்வழி இந்தப் ந்தப் பள்ளி இயங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும். அடுத்து, கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவு சங்கடப்படுகிறார்கள் என்றது குறித்து கான்பூரில் பேசிய கனம் அமைச்சர் அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இன்டர்மீடியேட் வகுப்பை ஒழித்தது எவ்வளவு தவறானது என்று அவர் அங்கு சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். நாமும் உணர்கிறோம். செகண்டரி பள்ளிகளில் பிரதேச மொழியில் பாடங்களைக் கற்பித்தால் அவர்கள் ப்ரீயூனிவர்ஸிட்டிக்கு போகும் போது அவர்கள் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் ல் படிக்க வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். திடீரென்று ஏற்படும் மாறுதல் காரணமாக மாணவர்கள் தங்களை ஒரு ஆண்டில் சரிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆகவே ப்ரீ யூனிவர்ஸிட்டியை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக உயர்தர செகண்டரிப் பள்ளி, 11-வது வகுப்பு ஏற்படுத்திய பிறகு மற்றொரு சிரமமும் ஏற்படுமென்று கூறியிருக்கிறார்கள். 11-வது வகுப்புவரை பிரதேச மொழியில் கற்கும் மாணவர்கள் பட்டப் படிப்பிற்குச் செல்கிறபோது அங்கே ஆங்கிலத்தில் படிக்க வேண்டியிருப்பதால் சர்வகலாசாலையின் தரம் பாதிக்கப்படும். தொழில் நுட்பப் படிப்பிற்காகச் செல்லக்கூடிய மாணவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படுமென்றும் கூறியிருக்கிறார்கள். இந்த