பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

393


மதுரை மாநகரம் ஒரு கார்ப்பொரேஷனாக மாற்ற அது ஒரு மேயரைப்பெற்றிருக்கும் அளவிற்கு, சட்டங்களை நிறைவேற்றி யிருக்கிறோம்.

அடுத்து, ஏற்கெனவே இருந்த நில உச்சவரம்புச் சட்டத்தில் இருந்த விலக்குகளையெல்லாம் நீக்கிடும் வகையில், கரும்புத் தோட்டம், மேய்ச்சல் காடு என்றெல்லாம் வைத்துக்கொண்டு அச்சட்டத்திலிருந்து விடப்பட்டிருந்த விலக்குகளையெல்லாம் களைந்திடும் வகையில் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியிருக் கிறோம். எனவே சமதர்ம மணம் கமழுமளவிற்கு அண்ணா அவர்கள் வழிநின்று, அவர் வகுத்துத் தந்த கொள்கைகளின் அடிப்படையில் பல திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கிறோம்.

100

89

இதிலே இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலும் இருக்கின்றன. குறிப்பாக, பொன்னப்ப நாடார் அவர்கள் சொல்லும்போது காவிரி நீர் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டார்கள். இதற்கென நாம் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை 31-ம் தேதி கூட்ட இருக்கிறோம். மத்திய அரசு இதிலே காட்டும் மந்த நிலையைக் கண்டிக்கும் வகையில், இந்த மன்றத்தின் குரலை எழுப்பியிருக்கிறோம் இங்கே. எனவே அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்க இருக்கும் முடிவினை நாம் சிரமேல் தாங்கி, அதை நிறைவேற்றத் தயாராயிருக்கிறோம் என்ற உறுதியையும் கூறி, எதிர்க்கட்சி, காங்கிரஸ் கட்சித் தலைவர் பொன்னப்ப நாடார் அவர்களுக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்கட்கும் தமிழக மக்களுக்கும் இவ்வுறுதியை மீண்டும் எடுத்துச் சொல்லிக்கொண்டு உங்கள் அனைவருக்கும் நன்றிகூறி, தமிழ்நாடு 1971-ம் ஆண்டு நிதி ஒதுக்க (எண்.2) சட்டமுன் வடிவை (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 32-1971) நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.

உசிலம்பட்டி தொகுதி இடைத்தேர்தல் பற்றிக் குறிப்பிட்டார்கள். அது பற்றி தேர்தல் கமிஷனரோடு தொடர்பு கொண்டிருக்கிறோம். இடையிலே ஒரு தேர்தல் நடைபெற வேண்டியிருப்பதால் இரண்டையும் ஒரே சமயத்தில் வைத்துக்கொண்டால் கஷ்டமாக இருக்கும் என்று கமிஷனர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இவை பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்.ட

Too

காபடியாக

LOT

பப