பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

395


குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கெல்லாம் போய்விட்டது என்று உருக்கமாக எடுத்துச்சொன்னார்கள்.

திருமதி த.ந. அனந்தநாயகி: துணைத் தலைவரவர் களே, எந்தக் கட்சி சார்புடையவர் என்றும் அவர் எந்தக் கட்சியின் சார்பாகச் சொன்னார் என்றும் சொன்னால் நல்லதாக விருக்கும்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு துணைத் தலைவரவர்களே, அவர்களுடைய பெயரைச் சொன்னாலே ஆளும் காங்கிரஸ் கட்சி என்று எல்லோரும் புரிந்துகொள்ளுமளவுக்கு இருக்கிறது. இன்றையதினம் தமிழகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சக்தி இருக்கிறது என்று சொன்னால் அது திருமதி டி. என். அனந்தநாயகி என்று எல்லோரும் புரிந்துகொள்வார்கள். திருமதி டி டி. என். அனந்தநாயகி என்று சொன்னாலே ஆளும் காங்கிரஸ் கட்சி என்றுதான் பொருள். அதற்குள் என்ன சந்தேகம் வந்து விடப்போகிறது. அதற்குள்ளாகவா வேறு ஒரு கட்சிக்குப் போக வேண்டிய நிலை வரப்போகிறது?

ல்

திருமதி த.ந. அனந்தநாயகி: மாண்புமிகு துணைத் தலைவரவர்களே, அவர்கள் கிண்டலுக்காகவே சொல்கின் றார்கள் என்பது எனக்குப் புரிகிறது. எதற்காக எந்த சமயத்தில் எப்படிப்பட்ட நிலைமையில் ஏற்பட்டது என்று எண்ணிப் பார்த்தால் புரியும். உங்கள் கட்சியில் ஏற்பட்ட அவல நிலைமை பிற கட்சிகளிலும் ஏற்படும் என்பதை உணர வேண்டும். அப்படி ஏற்பட்டதுதான் எங்களுடைய கட்சி நிலையும் லயும்.

திரு. ஆர். பொன்னப்ப நாடார்: துணைத் தலைவரவர் களே, எங்களுடைய கட்சிக்கு ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. நாங்கள் இருந்த இடத்திலேயேதான் இருக்கிறோம்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு துணைத் தலைவரவர்களே, இந்தத் துணை மதிப்பீட்டில் ஏற்கனவே வரவு- செலவுத் திட்டத்தில் சொன்னதைவிட அதிகமாகக் கோரப்படுகிறது என்றெல்லாம் கூறப்பட்டது. இது