பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

397


ஒதுக்கப்பட்ட எந்தப் பணமும் செலவழிக்கப்படாமல் சரண்டர் செய்யப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கே பல விஷயங்களை நண்பர் மதி அவர்கள் எடுத்துச்சொன்னார்கள். குடிசை வாழ் மக்களுக்கெல்லாம் அவர்களுடைய இடங்களைப் பட்டா செய்து கொடுக்கிறோம். நகரங்களிலும் நகரத்தினுடைய சுற்றுப்புறங்களிலும் அதை ஒழிக்க முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதற்காகத் திட்டத்தில் உள்ளது. உள்ளது. தொழிற்சாலைகள் அபிவிருத்தி அடைகின்ற நேரத்தில் அவற்றின் தேவையைக் கருத்தில் கொண்டு அதனால் ஏற்படுகின்ற தடைகளுக்குட்பட்டு பரிசீலனை செய்து பார்த்து வரவேண்டிய அவசியமிருக்கிறது. குடிசை மாற்று வாரியம் அதற்கான பணியில் ஈடுபட்டு வேலை செய்து வருகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். து

02

முக்கியமாக நண்பர் லத்தீப் அவர்கள் எடுத்துச்சொன்ன பிரச்சனை, அறிவிப்பு இப்பொழுதே வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மிக வலியுறுத்தி, மிக உருக்கமாக எடுத்துச் சொன்னார்கள். லப்பை முஸ்லீம்கள் ஏற்கனவே பின்தங்கிய வர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். உருது முஸ்லீம் களைச் சேர்க்கவேண்டுமென்ற கருத்தை எடுத்துச் சொன்னார்கள். பிற்பட்டோர் நலக் குழு அறிக்கையில் இதுபற்றிக் கூறப்பட்டிருக்கிறது. சலுகைகளைப் பொறுத்த வரையிலும், அத்தனைபேரும் அவர்கள் லப்பைகளாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி லப்பை என்றே கருதப் படுவார்கள். கொஞ்சம் தமிழ் பேசினாலும் லப்பை என்று பிற்பட்டோர் நலக்குழு ஏற்றுக்கொண்டிருக்கிறது. 1921-ம் ஆண்டு அறிக்கையின்படி பொதுவாக முஸ்லீம்கள் 85 முதல் 90 சதம் வரையில் லப்பைகளாகவே கருதப்பட்டு வரு கின்றார்கள் என்று கூறுகிறது. அதிலே மீதமுள்ள 10 சதவிகிதத் தினர்தான் உருது முஸ்லீம்களாக இருக்கிறார்கள் என்று அந்தக் கணக்கு அளிக்கிறது. வெகு காலமாகவே இருந்து வந்தவர்கள் லப்பை வகுப்பினர். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் மீதமுள்ள 10 சதவிகிதத்தினர்தான், அவர்களுக்கும் எல்லாச் சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லீம்