பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


சமுதாயத்தின் சார்பாகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சார்பாகவும் காயிதே மில்லத் அவர்களும், அவருக்குப் பிற்பட்டு வந்த தலைவர்களும், தமிழ்நாட்டிலுள்ள முஸ்லீம் தலைவர்களும் இந்த ஒரு கோரிக்கையை இந்த மன்றத்தில் வாதிட்டிருக்கிறார்கள். ஆகையினால் உருது முஸ்லீம்களும் பிற்பட்டோர் இனப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்பதை மகிழ்ச்சியோடு இப்பொழுது நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு.திருப்பூர். ஏ.எம். மொய்தீன்: தலைவரவர்களே, நான் எனது கட்சியின் சார்பிலும், என்னுடைய சகாக்களின் சார்பிலும், என் சார்பிலும் முதலமைச்சர் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அமைச்சரவைக்கும் எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ப மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: மாண்புமிகு துணைத் தலைவரவர்களே, இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு அளித்த மன்றத்திலுள்ள எல்லாக் கட்சி உறுப்பினர்களுக்கும், இதற்குப் பெரிதும் உதவியாகயிருந்த பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். (மணி அடிக்கப்பட்டது) நேரமாகிவிட்டது. திரு.பொன்னப்ப நாடார் அவர்கள் குறிப்பிட்டதைப்போல் மற்றவைகளை எல்லாம் நிதி ஒதுக்கீடு மசோதாவில் பேசுகிறபோது நாளை சொல்லிக்கொள்கிறேன் என்று கூறி, அமைகிறேன். வணக்கம்.

ணி