பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

39

தேர்தல், மாநில ஆட்சித் தலைவர் மானியம்

5

உரை : 5

நாள்: 11.07.1962

கலைஞர் மு. கருணாநிதி : சட்ட மன்றத் தலைவர் அவர்களே, மன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள தேர்தல்கள், மாநில ஆட்சித் தலைவர், அமைச்சர்கள் பற்றிய மான்யத்தின் மீது தரப்பட்டுள்ள வெட்டுப் பிரேணையின் மீது நான் சில கருத்துக்களை என் கட்சி சார்பாகக் கூற விரும்புகிறேன். வெட்டுப் பிரேரணை என்பது ஒரு மரபுக்காக குறிப்பிட்ட தொகையிலிருந்து வெட்டுவதாக எடுத்துச் சொல்லப்பட்டு, ஆனால் ஒதுக்கப்பட்டுள்ள மான்யங்களுக்காக அதிகமாக செலவழிக்க வேண்டுமென்று அதற்கான தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிற சம்பிரதாயம் இருக்கிறது என்றாலும், இந்த மான்யத்திலுள்ள ஒரு சில பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் உள்ளபடியே ஒதுக்கப்பட்டிருக்கிற தொகையை வெட்ட வேண்டுமென்ற கருத்தை இங்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். இங்கு இந்த விவாதத்தில் பேசிய எங்கள் கட்சி உறுப்பினர் திரு. மதியழகன் அவர்கள் நமது முதலமைச்சர் அவர்களை மிக அதிகமாக புகழ்ந்தார்கள். அந்த புகழ்ச்சிக்கு எல்லாம் முதலமைச்சர் அவர்கள் அருகதையுடையவர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் திரு. மதியழகன் அவர்கள் ஒரு சிறிய சோதனை செய்து பார்த்தார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். கடுமையான குற்றத்தை எடுத்துச் சொல்கிற நேரத்தில் கனம் முதலமைச்சர் அவர்களின் முகம் மிக சுருங்கி விடுகிறது. புகழ்ச்சியாக சொல்லும்போது அவருடைய முகம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம் என்பதற்காக அந்தத்