பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


று

பொதுவாக நம்முடைய மன்றத்தினுடைய விவாதங்கள் சில நாட்கள் சுவையாகவும், சில நாட்கள் மிகச் சூடாகவும் ஆகிக் கொண்டிருக்கின்ற நிலைமையைக் காண்கிறோம். நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். மாண்புமிகு உறுப்பினர்கள், என்னையும் சேர்த்துத்தான், இங்குஉரக்கப் பேசினாலும், மெதுவாகப் பேசினாலும், 50 லட்சம் என்ன ஆயிற்று என்று கேட்டால், பத்திரிகையிலே 50 லட்சம் என்ன ஆயிற்று என்றுதான் வரும், 50 லட்சம் என்ன ஆயிற்று என்று று உரக்கக் கேட்டாலும் பத்திரிகையிலே 50 லட்சம் என்ன ஆயிற்று என்றுதான் வரும். அதற்குச் சிறப்பாகப் பெரிய எழுத்துக்களைப் போட்டு யாரும் வெளியிடப் போவதில்லை. ஆனால் பொதுக் கூட்டங்களிலே வேகத்தை உணர்ச்சி முழக்கங்களை வைத்துக் கொள்வது நல்லது. சில நேரங்களிலே ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையிலே தாக்குவதைப் பார்க்கும்பொழுது உள்ளபடியே நான் வேதனைப்படுகிறேன். எந்தக் கட்சித் தரப்பிலிருந்து வந்தாலும், ஆளுங்கட்சித் தரப்பிலேயிருந்து வந்தாலும், எதிர்க்கட்சித் தரப்பிலேயிருந்து வந்தாலும், தோழமைக்கட்சித் தரப்பிலேயிருந்து எதிர்க்கட்சிக்கு வந்தாலும், எந்தக்கட்சித் தரப்பிலிருந்து வந்தாலும் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வது, கேலிசெய்வது, நாம் நிதியை ஒதுக்குகின்ற இந்த நேரத்திலே, அவைகளையும் ஒதுக்கிவிடுவது நல்லது என்று கருதுகிறேன். நிதியை ஒதுக்கி அரசுக்குத் தருகிறீர்கள், அவைகளை ஒதுக்கி அரசுக்குத் தராமல் அவைக்கு வெளியே வெளியே எறிந்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். அதற்கு மாண்புமிகு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். எந்தத் தரப்பிலே இருக்கின்றவர்களானாலும், என்னையும் உள்ளிட்டே சொல்கிறேன், ஒத்துழைக்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன். 16

6

சி

நண்பர் மதி அவர்கள் சொன்னார்கள். மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சொன்ன விஷயத்தைப் பற்றிக் கூறி யிருக்கலாம், மாஜிப் பேராசிரியர் என்று கூறுவதால் மனமகிழ்ச்சி ஏற்படப் போவதில்லை. ஆசிரியர்கள் மாஜியாக ஆவதில்லை; டாக்டர் ஹாண்டே அவர்கள் டாக்டர் தொழிலை விட்டுவிட்டு