பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

401


முழுக்க முழுக்க அரசியல் வேலை, கட்சி வேலை செய்தால் கூட அவர்கள் டாக்டர் ஹாண்டேதான். வழக்கறிஞர்களும் அப்படித்தான். என் பெயரைச் சொல்லக் கூடாதா என்று அம்மையார் அவர்கள் கேட்பார்கள், அவர்கள் பெயரையே வைத்துக்கொள்ளலாம், வழக்கறிஞர் தொழிலை விட்டு முழுக்க

முழுக்க

அரசியலுக்கு வந்தாலும் வழக்கறிஞர்தான் ஆனால் மந்திரிகள்தான் பதவியைவிட்டுப் போனபிறகு மாஜிகளாக ஆகிவிடுகிறார்கள். மக்களாலும், அறிஞர் அண்ணா அவர்களாலும் பேராசிரியர் என்று அழைக்கப் பட்டவர்கள் அவர்கள். நண்பர் மதி அவர்களாலும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் மாஜி பேராசிரியர் என்று அழைக்கப்பட்டதாலே...

திரு.கே.ஏ. மதியழகன்: ரொம்ப சாமர்த்தியமாக வாதாடிக்கொண்டிருக்கிறார்கள் முதலமைச்சர் அவர்கள். மாஜிப் பேராசிரியர் என்று சொன்னதே, எனக்குத் தெரியவில்லை, படித்துவிட்டு உறுப்பினர் வரவேண்டு மென்றதால், நிலக்கரி கேட்கக்கூடாதா என்று நான் மூன்று முறைகள் கேட்டபொழுது... அவர்கள்- பேராசிரியர்- என்பதிலே ஆட்சேபணை இல்லை, பேராசிரியர் இல்லாதவர் களையெல்லாம் பேராசிரியர் என்று ஒத்துக்கொள்ளும்போது மாண்புமிகு அமைச்சர் அவர்களை ஒத்துக்கொள்வதிலே எந்தவிதப் பாதகமும் இல்லை- அவர்கள் தெரியாதா, புரியாதா என்று சொன்னது எனக்குக் கொஞ்சம் விவரமாக இருந்தது. என்னை மட்டும் முதலமைச்சர் அவர்கள் எடுத்துச் சொல்வது, முன்னாலே அவர்கள் எடுத்துச் சொன்னதற்கு உதவிபுரிவதாக இல்லை.

நான்

மாண்புமிகு க கலைஞர் மு.கருணாநிதி: உட்படத்தான் சொல்கிறேன். மந்திரிகள் பதவிகளைவிட்டுப் போனபின் மாஜி மந்திரிகள் என்று சொல்வார்கள். ஆனால் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் மாஜியாகி விடுவதில்லை. மன உணர்வுகளை மற்றவர்களைப் புண்படுத்திவிடுகின்ற முறை யிலே பரிமாறிக் கொள்ளாமல் இருப்பது நல்லது, நகைச் சுவைக்குப் பரிமாறிக்கொள்ளலாம். தனிப்பட்ட முறையில்

14-க.ச.உ.(மா.து.நி-பா.1)