பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


ஆனால், இங்கே முதலமைச்சரைச் சேர்த்து நாம் விசாரிக்கலாம். முதலமைச்சர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு கால தண்டனை உண்டு என்று இந்தச் சட்டத்தில் இருக்கிறது. இந்தச் சட்டத்தைக் குறைத்துப் பேசுகிறோம். ஆனால், மராட்டியத்தி னுடைய சட்டத்தையும், ராஜஸ்தானுடைய சட்டத்தையும் ஆளும் காங்கிரசாக இருக்கிற கட்சி அங்கே நிறைவேற்றி விட்டு இங்கே நம்முடைய மாநிலத்திலே மாத்திரம் இந்தச் சட்டம் வந்தால் இது கருப்பு மசோதா, இது ரௌலட் சட்டம், நாங்கள் வெளியேறுகிறோம். இதை ஆதரிக்க முடியாது என்று கூறுவது பொருத்தமாக இல்லை.

ம்

அம்மையார் என்ன சொல்ல விழைகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அது வேறு மாநிலம், இது வேறு மாநிலம் என்று சொல்வார்கள். நேற்றைய தினம் நாங்கள் அகில இந்திய று கட்சி, மத்தியப் பிரதேசத்திலும் போட்டியிடுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். மாநிலங்களைத் தனித்தனியாகப் பிரிப்பது அவசியமில்லை. அதில் இந்திய கட்சியாக இருக்கிற அவர்கள் இந்த மாநிலத்திற்கொன்று அந்த மாநிலத்திற்கொன்று என்று பேசக்கூடாது என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேனே யல்லாமல் வேறு அல்ல.

2

மு

தியாகி மானியத்தைப் பற்றியும் முதியோர் ஓய்வூதியத் தைப் பற்றியும் சொன்னார்கள். தியாகி மானியத்தைப் பொறுத்த அளவில் வேறு மாநிலங்களைவிட தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் 7,500 பேர் என்கிற அளவிற்கு நாம் வழங்கி வருகிறோம். இதிலே எந்தவிதமான கட்சி மாறுபாடும் இல்லாமல், இன்னும் சொல்லப்போனால், சில பேர்களுக்கு, நற்சான்றுகள் இல்லாவிட்டாலும்கூட, சிறைச்சாலையில் இருந்தார்கள் என்று முன்னாள் அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர்கள், தியாகப் பட்டியலில் உள்ளவர்கள் சிபாரிசுக் கடிதங்களை வைத்து பலபேர்களுக்கு இந்த மானியங்கள் நேரடியாக வழங்கப்பட்டிருக்கின்றன. 1966-ம் ஆண்டு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டாலும் அந்த ஆண்டு 5 பேர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்களாலும் அவர்