பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


ம்

நண்பர் தங்கமணி அவர்கள் திருமால்புரம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கொடுமையைப் பற்றிச் சொன்னார்கள். அது பற்றித் தகவல் இன்னும் வரவில்லை. அப்படி நடைபெற்றிருக்குமானால் உள்ளபடியே அது கண்டிக்கத் தக்கது, வருந்தத்தக்கது. அதிலே யார் ஈடுபட்டிருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். முழு விவரங்களையும் நிச்சயமாக அறிந்து ஏற்ற நட வடிக்கையை எடுப்பேன் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நகர்ப்புறச் சொத்துக்களுக்கு உச்ச வரம்பு பற்றி என்ன பதில் சொல்கிறீர்கள் என்று நண்பர் மதி அவர்கள் கேட்டார்கள். நான் இந்த நகர்ப்புற சொத்து உச்ச வரம்பு பற்றி டில்லியில் பேசப்பட்ட நேரத்திலும், வேறு சில மாநில முதலமைச்சர்கள் "எங்கள் மாநிலத்தில் கொண்டு வந்து விட்டோம்" என்று சொன்ன நேரத்திலும், நான் அளித்த பதில்- "இது ஒரு கவர்ச்சி கரமான கோஷமாக இருக்கிறது; நடைமுறைப்படுத்துவதிலே பெரும் சிக்கல்கள் இருக்கின்றன" என்று சொன்னேன். இப்போதும் சிக்கல்களைத்தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

நகர்ப்புறச் சொத்துக்கு உச்ச வரம்பு என்பது- ஒன்றான இந்தியா, ஒருமைப்பாடான இந்தியாவில் அகில இந்திய அளவிலே இலக்கணம் வகுக்கப்படவேண்டுமென்று சொல் லாமல் அந்தந்த மாநிலங்கள் தனித் தனியாக இலக்கணங்களை வகுக்குமானால் மற்றொரு மாநிலத்திற்குப் போய் நாம் வகுத்த லக்கணம் ஈடேற முடியாமல் செய்ய முடியும்.

உதாரணமாக, பலவீடுகளுக்கு, பல தொழிற்சாலை களுக்குச் சொந்தக்காரராக இருப்பவரை உச்ச வரம்பின்கீழே கொண்டு வருவோமானால் அவர் அதையே அடுத்த மாநிலத் தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையைப் பெற முடியும். ஆகவே, இதற்கு அகில இந்திய அளவில் இலக்கணம் வகுக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நகர்ப்புற உச்ச வரம்பு பற்றி கவனிக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லி யிருக்கிறேன்.

ս