பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

கு.

தந்திரத்தைக் கையாண்டிருப்பார்கள் என்று கருதுகிறேன். அந்தசோதனையில் திரு. மதியழகன் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். (கனம் திரு. கு காமராஜ் : சாமர்த்தியமாக கிண்டல் செய்வது தெரியாமல் இல்லை) புகழுரையைத் தாங்கும் இதயமும், மனப் பக்குவமும் இருப்பதுபோல் ஆட்சியில் இருக்கிற, அவல நிலையையும் நிர்வாகத்திலுள்ள கேடுபாடுகளையும் எடுத்துச் சொல்லும்போது அந்த மனப் பக்குவம் இருக்கவேண்டுமென்பதற்காக இதை குறிப்பிட்டேனே தவிர, வேறு அல்ல, தேர்தலைப் பற்றிய வெட்டுப் பிரேரணை மீது நான் அதிகமாக பேச விரும்ப வில்லை. காரணம், கவர்னர் உரை மீது நடந்த விவாதத்தில் அது பற்றி நான் வெகு விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறேன்.

திரு. கோ. வெங்கட்ராமன் : ஆன் எ பாயின்ட் ஆப் ஆர்டர். திரு. மதியழகன் அவர்கள் பேச்சுக்கு திரு. கருணாநிதி அவர்கள் கருத்துரை வழங்குவதை திரு. மதியழகன் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா என அறிய விரும்புகிறேன்.

திரு. மு கருணாநிதி : தேர்தலைப்பற்றி அப்பொழுது நான் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆகவே தேர்தலைப் பற்றி இங்கு அதிகமாகப் பேச விரும்பவில்லை. ஆளும் கட்சியைச் சார்ந்த அம்மையார் அவர்கள் பேசும்போது, தேர்தலில் எதிர்கட்சியில் உள்ளவர்கள் ஆள்மாறாட்டம் செய்தார்கள் என்று குறிப்பிட்டார்கள். ஆள் மாறாட்டம் செய்ததாக சொல்லப்படும் தேர்தல் வழக்குகள் எல்லாம் எல்லாக் கட்சி சார்பிலும் நீதி மன்றங்களில் இருக்கின்றன என்பதை இந்த நேரத்தில் எடுத்துக் காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே அதை பிரித்துக் கூற நான் விரும்பவில்லை. ஆனால் ஆள் மாறாட்டம் வாக்காளர்களைப் பொறுத்து மட்டுமில்லை அபேட்சகர்களைப் பொறுத்திருக்கக் கூடிய வகையிலும் மாலை வரை பட்டுச் சட்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் ஆறு மணிக்குப் பின்னர் அமைச்சரை சந்தித்த பிறகு கதர் சட்டை போடுமளவுக்கு ஆள் மாறாட்டம் நடைபெற்று தேர்தலில் போட்டி போட்டிருக் கிறார்கள். அப்படிப்பட்ட ஆள் மாறாட்டத்தைப் பற்றி, சுதந்திரத்திற்காக தியாகங்கள் செய்தோம் என்று தங்கள் பரம்பரையை எடுத்துச் சொல்லி பெருமைப்படுகிற ஆளும்