பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

411


Dr.H.V.HANDE: Sir, I have been persistently asking on the floor of the House for the increase of pension. On behalf of the pensioners, I thank the Hon. chief Minister for that.

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி:

நேரத்திலாவது நன்றிகளைப் பெறுகிறேன். மகிழ்ச்சி.

கடைசி

ஓய்வூதியதைப் பொறுத்து மேலும் ஒரு கோரிக்கையை யும் அரசு ஏற்க முன்வந்துள்ளது. அதாவது, அரசு ஊழியர் களுக்கு ரூ.10 அகவிலைப்படி உயர்வு கொடுத்ததை ஒட்டி, ஓய்வூ ஊதியம் பெறுவோருக்கும் ரூ.5 அகவிலைப்படி உயர்வு கொடுக்கப்படும். அக்டோபர் 1973 வரை இத்தொகை அரசிடம் சேமித்து வைக்கப்பட்டு, மொத்தத் தொகையாகக் கொடுக்கப் படும். அதற்குப் பிறகு மாதாமாதம் கூடுதலாக ரூ.5 கொடுக்கப் படும். குறைந்தபட்சம் ஓய்வு ஊதியம் பெறுவோருக்குக் கிடைக்கும் ஓய்வு ஊதிய உயர்வில் அகவிலைப்படி உயர்வு உள்ளடங்கும்.

5

உதாரணமாக, 40 ரூபாய் பெறுபவர்கள் 45 ஆகி ஐந்து ரூபாய் அதிகமாகப் பெறுவார்கள். 43 ரூபாய் பெறுபவர்கள் 5 ரூபாய் அதிகமாகப் பெற்று பிறகு 2 ரூபாய் அதிகமாகப் பெறு வார்கள். 46 ரூபாய் பெறுபவர்கள் ஐந்து ரூபாய் அதிகமாக, ஆக 51 ரூபாய் பெறுவார்கள்.

இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். நெடுஞ்சாலைத் துறையில் பல பேர் நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்பட்டிருக் கிறார்கள். அதே போல் நெடுஞ்சாலைத் துறையிலுள்ள கேங் மஸ்தூர்கள் வேலை செய்கிற நேரத்தில், வெயில் கொதிக்கிற நேரத்தில் தாரை எடுத்து ஊற்ற அவர்கள் படுகின்ற கஷ்டத்தை நாம் காரில் செல்லும்போது பார்த்திருக்கிறோம். அவர்கள் காலில் சாக்குத் துணியைக் கட்டிக்கொண்டு வெயில் கொடுமையைப் பொறுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென்பதற்காக ஓராண்டுக்குக் குறையாது தொடர்ந்து பணியாற்றி வரும் கேங் தொழிலாளர்கள் அனைவருக்கும் வரும் ஆண்டிலிருந்து கிராமக் கைத்தொழில் வாரியம் மூலமாகக் காலணிகள் வழங்கப்படும். ஏறத்தாழ