பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

415


அவைகளின் கோரிக்கைகளை எல்லாம் சேர்த்துத்தான் இன்றைக்கு இந்தத் துணைமதிப்பீட்டில் கோரிக்கைகளை இந்த அவை முன்னால் வைத்திருக்கிறோம்.

கு

கு

இளைஞர் அணியைப்பற்றி நண்பர் ஜேம்ஸ் அவர்களும், மற்றவர்களும் இங்கே குறிப்பிட்டனர். இளைஞர் அணி தோல்வியிலே முடிந்துவிடக்கூடாதென்ற கருத்தை அவர்கள் எடுத்துச்சொன்னார்கள். சில பேர் அது தோல்வியிலேயே முடிந்துவிடவேண்டுமென்று கருதுகிற நேரத்தில், இவர்கள் அப்படி முடிந்துவிடக் கூடாதென்கிற கருத்தினைக்கூறி இந்த த அரசுக்கு ஒரு எச்சரிக்கை செய்தமைக்காக நான் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். இளைஞர் அணியில் பயிற்சி பெறுகிற வர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அவர்களுக்கு முதலிடம் வகுக்கப்பட வேண்டுமென்ற கருத்தை நண்பர் ஜேம்ஸ் அவர்கள் எடுத்துச்சொன்னார்கள். ஆனால் அப்படிச் சட்டப் பூர்வமாகச் செய்ய முடியாது என்பதை நான் இங்கே அவர்களுக்கு 6 எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். கூடுமான வரையில் ளைஞர் அணியில் பயிற்சி பெறுகிறவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கும் முயற்சியினை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்தத் திட்டம் 1971-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளில் தொடங்கப்பட்டது. அப்பொழுது ஆண்கள் 1,800 பேரும் பெண்கள் 200 பேரும் ஆக 2.000 பேர் இந்த இளைஞர் அணியில் சேர்க்கப்பட்டார்கள். 1972-73ல் ஆண்கள் 1,450 பேரும், பெண்கள் 150 பேரும் ஆக, 1,600 பேர்கள் சேர்க்கப்பட்டார்கள். 1973-74ல் ஆண்கள் 1,525 பேர், பெண்கள் 275 பேர் என்ற அளவில் மொத்தம் 1,800 பேர்கள் சேர்க்கப் பட்டார்கள். ஆக 4,775 ஆண்களும் 625 பெண்களும், மொத்தம் 5,400 பேர் இந்த இளைஞர் அணியில் சேர்ந்தார்கள். இவர்கள் அத்தனை பேரும் இளைஞர் அணியில் இப்பொழுது இருக் கிறார்களா என்றால், பல பேர் வேறு வேலைவாய்ப்புகளைப் பெற்று, இளைஞர் அணியிலே ஏற்கனவே உள்ள நிபந்தனை யின் அடிப்படையிலே, அவர்கள் அங்கே போயிருக்கிறார்கள். குறிப்பாக, 1971-72ல் சேர்க்கப்பட்டவர்களில் 991 ஆண்களும்,

,