பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


121 பெண்களும்; 1972-73ல் சேர்க்கப்பட்டவர்களில் 1,191 ஆண்களும், 136 பெண்களும்; 1973-74ல் சேர்க்கப்பட்ட வர்களில் 1,200 ஆண்களும், 224 பெண்களும் தவிர, மற்றவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று இளைஞர் அணியில் இருந்து சென்றிருக்கிறார்கள். ஆக, இந்த இளைஞர் அணியில் தற்பொழுது உள்ளவர்களுடைய எண்ணிக்கை

3382

ஆண்களும் 481 பெண்களும் ஆக 3,863 பேர்தான். மொத்தம் சேர்க்கப்பட்ட 5,400 பேர்களில் 3,863 பேர்தான் இளைஞர் அணியில் இருக்கிறார்கள். மற்றவர்கள் வேறு வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். படித்து வேலையில்லாமல் இருக்கிற இளைஞர்களுக்கு நாம் வேலை வாய்ப்பும் தர வேண்டும், அதே நேரத்திலே அவர்களுக்கு ஊதியம் அளிக்கிற அளவுக்கு நம்முடைய நிதி ஆதாரம் வசதியாக இல்லை. ஆகவே, அவர்களுக்கு வேறு வேலை கிடைக்கிற வரையில் அவர்களுக்கு மாதாந்திரச் செலவுகள் என்ற அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ரூ.175 வழங்கி, கிராமாந்திரங்களிலே அவர்கள் முதியோர் கல்வி, தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம், தூய்மை பேணல், வேறு பல உலகத்தொடர்பு பற்றிய அறிவுரைகள் இவைகளிலே அங்குள்ள மக்களோடு தொடர்பு கொள்வதற்கு ஏற்றவகையில் அந்தப் பணி அமைந்திட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.

மு

அது சில இடங்களிலே சரியாகப் பணியாற்றவில்லை யென்ற கருத்தும் இந்த மன்றத்திலே எடுத்துச்சொல்லப்பட்டது. அப்படிச் சரியாகப் பணியாற்றவில்லையென்றால், எந்த எந்த ஊரில், எந்த எந்த இளைஞர் அணி சரியாகப் பணியாற்ற வில்லை என்பதை அரசுக்குஅல்லது தொடர்புடைய அலுவலகத் திற்குத் தெரிவிக்கவேண்டிய பொறுப்பினை நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இது ஒரு சமுதாயக் கடன். அதை நிறைவேற்றுவதற்காக இளைஞர்கள் இன்றைக்குப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய தொண்டு சிறந்திடுமேயானால் எதிர்காலத்தில் இந்த நாட்டினுடைய புகழ் விளக்குகளாக அவர்கள் அமைவதற்கு வழிவகைகள் காண