பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


கொள்ளவேண்டும். ஏனென்றால், அதிலே 300, 400 தொழி லாளர்கள் வேலை செய்கிறார்கள். அந்தத் தொழிலாளர் களுடைய வாழ்க்கையை மையமாக வைத்து, நாம் செய்கின்ற உதவியினால் அந்தத் தொழிலாளர்களுடைய வாழ்வும் மேம்படும். அவர்களும் பாதிக்கப்படமாட்டார்கள் என்கின்ற அளவிலேதான் அரசும் அந்தக் கடனை அளிக்க முன்வந்தது.

ல்

அது மாத்திரமல்ல, இன்றைக்கு இந்த நிறுவனத்தில் அரசின் பொறுப்பிலேதான் ஒரு ஐ. ஏ. எஸ். அதிகாரி நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதைப் போலவே, சதர்ன் ஸ்ட்ரக்ச்சுரல்ஸ். அதுவும் மூடப்படாமல் பார்த்துக்கொள்வதற்காக இந்த அரசு உதவி வி களைச் செய்திருக்கிறது. அதையும் இந்த மன்றத்திலே நாம் பல முறை எடுத்து விளக்கி இருக்கிறோம்.

இப்பொழுது தனிப்பட்ட தொழில் அதிபர்களுக்கு இவைகளை எல்லாம் நாம் வழங்கி இருக்கிறோம் என்று கொள்ளாமல், காலப்போக்கில் நாம், இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலே கருதிக்கொண்டிருப்பது, இந்த நிறுவனங் களையெல்லாம் ஒன்று அரசுத் துறை நிறுவனங்களாக ஆக்கி விடுவது அல்லது இந்த அரசினுடைய புதிய கொள்கையான கூட்டுத்துறை நிறுவனங்களாக ஆக்கிவிடுவது என்பதைப் பற்றியும் இந்த த அரசு யோசித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நான் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

6

சென்னையில் குதிரைப் பயிற்சிக்காக லட்சம் லட்சமாகச் செலவழிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. குதிரைப் பந்தயம் இருக்கிற வரையிலே குதிரைப்பயிற்சியும் தேவை. குதிரைப் பந்தயம் அடியோடு ஒழிக்கப்படுமானால் குதிரைப் பயிற்சியைப் பற்றி நாம் ஒருவேளை கவலைப்படாமல் இருக்கலாம்.

குதிரைப் பந்தயத்தைப் பொறுத்தவரை, முக்கியமான சீசன் முடிவடைந்த பிறகு, ஜிம்கானா ரேஸ்கள் நடக்கின்றன. சென்னை போலோ சங்கமும் குதிரைப் பயிற்சி அளிப்பதற்கான