பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

று

41

கட்சியை சார்ந்தவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாரும் புதிதாக வந்து சேரவில்லையா என்று கேட்கலாம். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வேறு கட்சியில் இருந்து வந்து சேருவதற்கும், எதிர்கட்சியில் இருந்து ஆளும் கட்சியில் போய் சேருவதற்கும் இருக்கும் பெரிய வித்தியாசத்தை கனம் அமைச்சர் அவர்கள் உணரவேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுக்கு ஆளும் கட்சியிலிருந்து சிலர் வருகிறார்கள் என்றால் அடக்கு முறைக்கு ஆளாகிவருகிளார்கள். அதுவும் பயங்கரமான அடக்கு முறைகள் எல்லாம் தலைகாட்டத் தயாராயிருக்கிறது. நாட்டுப் பிரிவினை என்று பேசினால் அவர்களுக்கு எப்படி எப்படி தண்டனைகள் தரப்படும் என்று சொல்கிற அடக்கு முறைகள் உருமிக்கொண்டிருக்கிற நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வருகிறார்கள். ஆளும் கட்சிக்கு செல்கிறவர்கள் இந்த இடுக்கண்களிலிருந்து தங்களை விடுவித்து கொள்ளவும், அங்கே சென்றால் பல வசதிகள், சலுகைகள் பெறலாம் என்பதற்காகவும் செல்கிறார்கள் என்ற வித்தியாசத்தையும் ஆளும் கட்சியினர் உணரவேண்டுமென்று குறிப்பிட விரும்புகிறேன். தேர்தலைப்பற்றி பேசவில்லை என்று குறிப்பிட்டேன். ஆனால் தமிழ்நாட்டிலுள்ள தேர்தல்களைப் பற்றி இங்கு பேச விரும்புகிறேன். நமது கனம் நிதியமைச்சர் அவர்கள் அறநிலைய அமைச்சராக இருக்கிற காரணத்தினால் அத்தகவலை இந்நேரத்தில் எடுத்துச் சொல்வதுதான் சாலப்பொருத்தமாகயிருக்கும், வேறு வாய்ப்பு கிடைக்காது என்பதற்காக அதை இங்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.

நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள கோவில்களிலுள்ள தேர்கள் எல்லாம் பழமை அடைந்துவிட்ட காரணத்தினால் ஏலம் போடப்படுகின்றன. அப்படி ஏலம் எடுக்கிறவர்கள் பத்து பேர்கள் இருபது பேர்கள் சேர்ந்து கொண்டு 2,000 அல்லது 3,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கின்றார்கள். அப்படி எடுத்து, வடபுலத்திலுள்ள பம்பாய் போன்ற இடங்களிலுள்ளவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் 15 ஆயிரம் ரூபாய் என்று இப்படி