பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

419


முயற்சிகளை இப்பொழுது கையாண்டு, அவைகள் இவற்றை நடத்திக்கொண்டிருக்கின்றன. பந்தயங்கள் வாயிலாக, சராசரி ஆண்டு ஒன்றுக்கு 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை நமக்கு கிடைத்து வந்தது. 1972-ல் மட்டும் 12 லட்சம் ரூபாய் அந்த வரியாலே கிடைத்தது. இந்தச் சங்கங்கள் தங்கள் நடைமுறைக் கணக்கில் வந்துள்ள துண்டைச் சரிக்கட்ட முடியாமல் சலுகை களைக் கேட்டார்கள். அப்படி சலுகைக் கேட்டபொழுது, நாம் முழுச் சலுகையும் அளிக்காமல், அதற்குப் பதிலாக, மொத்தம் ரூ.1 லட்சம் மானியமாகக் கொடுத்திருக்கிறோம். இது ஒன்றும் பெரும்தொகை அல்ல என்பதையும் நான் இங்கே குறிப்பிடு கிறேன்.

நம்முடைய நண்பர் ஜேம்ஸ் அவர்கள் குமரி மாவட்டம் தாயகத்தோடு இணையப் போராடியவர்களுக்குத் தியாகி மானியம் வழங்கவேண்டுமென்று எடுத்துச்சொன்னார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே ஈடுபட்ட மொழிப் போராட்ட 1 வீரர்களுக்குத் தியாகி மானியம் வழங்கவேண்டுமென்கிற பிரச்சினை வந்த பொழுது. இந்தப் பிரச்சனையும் எழுப்பப் பெற்றது. நான் அதோடு இதனையும் இணைத்து எத்தனை பேருக்கு வழங்கப்படும் என்கிற கணக்கையிட்டு அது ஆராயப் படும் என்கிற உறுதியினை அளித்திருக்கிறேன்.

$

தமிழ்நாட்டிலே உள்ள போக்குவரத்து ஊர்தி, பேருந்து வண்டிகள் சீர்குலைந்து விட்டன என்று நண்பர் ஜேம்ஸ் அவர்கள் ே சொன்னார்கள். நண்பர் குமாரசாமி அவர்கள், போக்குவரத்துப் பேருந்துகள் மாத்திரமல்ல, தமிழ்நாடே சீர்குலைந்து விட்டது. தமிழ் நாடே அமைதியற்ற நிலையில் இருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். தமிழ் நாடு ஒழுங்காகத்தான் இருக்கிறது. சில பேருடைய மனம்தான் குழம்பிப் போயிருக்கிறது. அமைதியற்றுப் போயிருக்கிறது. ஐயோ தமிழ்நாடு ஒழுங்காக இருக்கிறதே, அமைதியோடு இருக்கிறதே, இந்தியாவில் இருக் கிற ஒரு சில நல்ல மாநிலங்களோடு ஒப்பிட்டுக் காட்டக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு இருக்கிறதே என்ற வேதனையில் இன்றைக்குச் சில பேருடைய மனம் அலை மோதிக்கொண் டிருக்கிறது என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.