பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


நண்பர் ஜேம்ஸ் அவர்கள் இன்றைக்கு வேறு யாராவது சொல்லிவிடப் போகிறார்கள் என்பதற்காக, முன்னதாகவே கருணாநிதி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் சொல்கிறார்கள், நானும் சொல்கிறேன் என்று சொன்னார்கள். நானோ இங்கிருக்கின்ற மற்ற அமைச்சர்களோ ராஜிநாமா செய்வதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு இருக்கிற கவலையெல்லாம் நாங்கள் போய்விட்டால் வேறு று யார் வந்து இங்கே உட்காருவது என்கிற கவலையிலேதான் அதைச் செய்யாமல் இருக்கிறோம்.

6

6

கிளைவ் விடுதித் தகராறா, பாளையங்கோட்டைத் தகராறா இந்தத் தகராறுகளுக்கு உடனடியாக நீதி விசாரணை வைத்து நடுநிலையான தீர்ப்பு பெறப்பட்டு அந்த அடிப்படையிலே இன்றைய தினம் நாம் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். இப்படி நடவடிக்கை எடுத்த ஒரு அரசு ராஜிநாமாச் செய்யவேண்டும் என்று கூறிவிட்டு, நீதி விசாரணை என்னுடைய ஆட்சியிலே கிடையாது, அடிக்கடி நீதி விசாரணை வைத்தால் போலீசார் தங்கள் கடமைகளைச் செய்ய மாட்டார்கள் என்று சொல்லி 1965ஆம் ஆண்டிலே மாணவர்களைச் சுட்டு வீழ்த்தி, மத்தியிலே, நாடாளு மன்றத்திலே உள்துறை அமைச்சர் நந்தா அவர்களால் “பாறை போன்ற மனிதர்" என்று பாராட்டப்பட்ட பக்தவத்சலத்தை எங்களுக்குப் பதிலாக உட்கார வைப்பது என்றால் அதற்காகக் கவலைப்படுகிறோம், அதனால்தான் ராஜிநாமா செய்ய மறுக்கிறோம்.

முதுகுளத்தூரிலே நாற்பது பிணங்கள் விழுந்தன; தாய்மார்கள் கற்பழிக்கப்பட்டார்கள், குழந்தைகளின் பிணங்கள் வாய்க்காலிலே மிதந்தன, போலீஸார் அத்துமீறி அந்தப் பகுதியை வேட்டைக்காடாக ஆக்கினார்கள் அதற்கு நீதி விசாரணை வைக்க வேண்டும் என்று அண்ணாவும் கல்யாண சுந்தரமும் சசிவர்ண தேவரும் கேட்டபோது நீதி விசாரணை வைக்க முடியாது என்று சொன்ன காமராசர் முதலமைச்சராக இங்கே வந்து உட்கார்ந்துவிடுவாரோ என்றுதான் நாங்கள் ராஜிநாமாச் செய்யவில்லை.