பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

423


இந்த


மாணவர் போராட்டம் இங்கு நடைபெற்றபொழுது மாநிலத்திலேயே இருப்பது தவறு என்று கோவாப்பகுதிக்குப் போய்விட்டார்களே, அவர்களையா முதலமைச்சராகக் கொண்டு வந்து உட்கார வைக்கப் போகிறீர்கள்? ஆகவே மாணவர்களுக்காக இளமை காலம் முதல் பாடுபட்டு மாணவர்களுடைய ரத்தத்தோடு ரத்தமாக உரைந்து இன்றைக்கும் மாணவர்களை எங்களுடைய உடன்பிறவாச் சகோதரர்களாகக் கருதியிருக்கின்ற எங்களை நீக்கிவிட்டு வேறு ஒருவரை தகுதியானவர் என்று சொல்வார் களானால் நாங்கள் விலகிக் கொள்ளத்தயாராக இருக்கிறோம். அவர்கள் இல்லை என்பதற்காகத்தான் நாங்கள் இந்தப் பதவியிலே இருக்கின்றோமே அல்லாமல் வேறல்ல.

திரு.கே.டி.கே. தங்கமணி: நீதிவிசாரணை பற்றிச் சொன்னார்கள். சென்ற ஜூலை மாதம் 5-ஆம் தேதியன்று விவசாயிகள் மேல் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்ற பொழுது 17 பேர்கள் இறந்துவிட்டார்கள். அப்பொழுது நீதி விசாரணை வேண்டுமென்று நாங்கள் எல்லாம் கேட்டோம். அப்பொழுது என்ன பதில் சொல்லப்பட்டது? வேறு சில தலை வர்கள் வேண்டாம். என்று சொல்லிவிட்டார்கள் என்றுதானே சொன்னார்கள். ஏன் அதற்கு அரசிற்குப் பொறுப்பில்லையா? அரசினுடைய போலீஸ்தானே 17 பேர்களைச் சுட்டது? அன்றைக்கு நீதி விசாரணை போடமறுத்துவிட்டு இன்றைக்கு நீதி விசாரணை கொடுத்ததைப் பெரிய பிரச்சனையாக ஏன் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமென்பது புரியவில்லை.

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டுமென்று அவர்களது தலைவர் கல்யாண சுந்தரம் கேட்டுக்கொண்டார்கள். கல்யாணசுந்தரம் அவர்களும் விவசாயப் போராட்டத் தலைவர்கள் எல்லாக் கட்சியைச் சேர்ந்தவர்களும் உட்கார்ந்து விவாதித்தபோது வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அப்படியானால் நீதி விசாரணை என்னாவது