பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


தி

பாராட்டியதைப் போல், விசாரணைக்கு இங்கே உடனடியாக உத்தரவிடப்பட்டு, இங்கே தரப்பட்ட தகவல்கள் சரியானவைதானா என்கின்ற சந்தேகம் எழுந்ததும், அவைகளை நீக்கிக்கொள்வது இந்த அரசுக்கு உரிய கடமை என்பதை உணர்ந்து நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நீதி விசாரணையினுடைய முடிவுகள், அவர்கள் அறிவித்திருக்கிற அந்த அறிக்கைகள் காவல் துறை யினர் அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்று கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் பற்றியும், பாளையங்கோட்டை சம்பவத்திலே பேராசிரியர் ஒருவர் அடிக்கப்பட்டது தவறானது என்று காவல் துறையினர் மீது குற்றம் சாட்டியும் ஆனால் லூர்துநாதன் என்ற மாணவர் இறந்தது பற்றி, போலீசாரால் கொல்லப்பட்டார் என்பது தவறு, அவர் ஆற்றிலே மூழ்கி இறந்தார் என்ற ஒரு கருத்தையும் நீதி விசாரணையிலே கலந்துகொண்ட இரண்டு நீதிபதிகளும் கிளைவ் ஹாஸ்டலைப் பற்றியும், பாளையங்கோட்டை பற்றியும் முறையே தங்களுடைய அறிக்கையிலே தந்திருக்கிறார்கள்.

நீதி விசாரணை அறிக்கை வந்த பிறகு, அந்த அறிக்கையின் அடிப்படையிலே நடவடிக்கைகள் எடுக்கத்தான் அரசு இருக்கிறது. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பாளையங்கோட்டையிலே என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள் என்று திருமதி அனந்தநாயகி அவர்கள் இங்கே கேட்டார்கள். அறிக்கையின் அடிப்படையிலே பாளையங்கோட்டையிலே பேராசிரியர்மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர் ராஜசேகரனின் இரண்டு மகன்கள்மீதும் போலீசார் மீதும் வழக்கு தொடரப்படு வதற்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அவர்கள் வழக்கறிஞர்கள் என்ற காரணத்தால், அவைகளுக்குச் சம்பிரதாய முறைகள் எல்லாம் இருக்கின்றன என்பது தெரிந்திருக்கும். பழைய காலத்து ராஜதர்பார் போல இவர்களைக் கொண்டு போய் சிரச்சேதம் செய்' என்றோ. அல்லது 'சிறையிலே அடை' என்றோ உத்தர விடுகின்ற காலத்திலே நாம் இப்பொழுது இல்லை. ஜனநாயகத் திலே, சட்ட சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு சட்டரீதியாகத்தான் நாம்