பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

433


கட்டத் தேவையில்லை என்ற மாறுபட்ட கருத்துக்களெல்லாம் வெளிவந்தன. அந்த மாறுபட்ட கருத்துக்களுக்கு நாம் மதிப்பு அளித்தோமா இல்லையா என்பதைவிட நம்முடைய நிதி ஆதாரங்கள் எந்த அளவிற்கு அதிக உதவி செய்யும் என்பதை எண்ணிப்பார்த்து, உடனடியாக பெரிய அளவிலே வேறொரு இடத்தில், 4 கோடி ரூபாய், 5 கோடி ரூபாய், செலவில் ஒரு புதிய கட்டிடத்தை தலைமைச் செயலகத்திற்காகக் கட்டுவது என்பது இயலாத காரியம் என்கின்ற முடிவிற்குத் தற்காலிகமாக வந்து, இப்பொழுது இருக்கின்ற நம்முடைய தலைமைச் செயலகத்தையே கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டலாம் என்பதற்காக 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவிற்கு, அதற்காக டெண்டர்கள் விடப்பட்டு, முடிந்து, பொதுப்பணித்துறையின் மூலமாக அந்த வேலைகள் ஏப்ரல் திங்களில் தொடங்க இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். பிறகு தலைமைச் செயலக அலுவலாளர்களுக்கான வாய்ப்பு வசதிகள் அவர்கள் பணிபுரியும் அளவில் நிச்சயமாகப் பெருகும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ணி

பேசிய உறுப்பினர்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திரு. கே. டி. கே. தங்கமணி அவர்களும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. பொன்னப்ப நாடார் அவர்களும், முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினர் திரு. ஜப்பார் அவர்களும், செழியன் அவர்களும் ஓய்வூதியம் பெறுகின்ற அரசு அலுவலாளர்களுக்கு மேலும் பல சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமென்று எடுத்துச் சொன்னார்கள். அவர்களுக்குத் தரப்படுகின்ற அகவிலைப் படியை இன்னும் உயர்த்தித் தர வேண்டுமென்கின்ற கருத்தை ஹாண்டே அவர்கள் மீண்டும் ஒரு முறை இந்த மன்றத்தில் வலியுறுத்தினார்கள்.

பொதுவாக, ஓய்வூதியம் பெறுகின்ற அரசு அலுவலாளர் களுக்கு இந்த ஆட்சி அமைந்ததற்குப் பிறகுதான் அதிகச் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை இந்த மன்றத்திலே வீற்றிருக்கின்ற உறுப்பினர்கள் யாரும் மறுத்திடமாட்டார்கள் என்றே நான் திண்ணமாக நம்புகின்றேன். அகவிலைப்படி ஓய்வூதியம் பெறுபவர்களுக்குத் தருவது என்ற முறையைக் கடந்த 3, 4 ஆண்டுக் காலத்திற்கு முன்புதான் இந்த அரசு மேற்கொண்டு ஓய்வுபெறும் பென்ஷன்தாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்பட்டுபார்த்தால், அரசுப் பணியாளர்களுடைய பணியின் கடைசி 12 திங்களில் வாங்கிய

15-க.ச.உ.(மா.து.நி-பா.1)