பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


இவர்களுக்கும் ஓய்வூதியத்தைப் பெறுவதில் இருக்கும் சங்கடங்களைக் குறைக்க அரசு எடுத்திருக்கும் முக்கியமான முயற்சி கெசட் பதிவு இல்லாத அரசு அலுவலாளர்கள் ஓய்வு பெற்றவுடனே அந்தந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரியே புரொவிஷனல் ஓய்வூதியத்தையும், பணிக்கொடையையும் (கிராசுவிடி) கொடுக்கலாம் என்று உத்தரவிட்டிருக்கிறோம். பதிவு பெற்ற அலுவலாளர்களாக இருந்தால் முழு ஓய்வூதியத்தில் 50 சதவிகிதமும் கிராசுவிடியும் துறைத்தலைவர் கொடுக்கலாம் என்று உத்தரவிட்டிருக்கிறோம்.

ல்

மேலும் தற்போது நடைமுறைச் சிக்கல்களைக் குறைப் பதற்காக மாநிலக் கணக்காய்வுத் தலைவரோடு (ஏ.ஜி.) கலந்தாலோசித்து ஏற்ற முடிவுகளை எடுக்க அரசு முயற்சித்து வருகிறது. ஓய்வூதியம் கிடைக்க வேண்டிய நாளில் தாமதம் எற்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்தோடு 8 சதவிகிதம் வட்டி வழங்க ஆணையிட்டிருக்கிறோம் என்றாலும்கூட இடையில் மாவட்ட அளவில் ஏற்பட்டு விடுகிற தாமதங்களை எப்படித் தவிர்ப்பது என்ற பிரச்சினைகளை எல்லாம் ஆராய சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, அவர் ஏ.ஜி.-யுடன் தொடர்பு கொண்டு தாமதங்களைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளை எப்படிச் செய்யலாம் என்றும் யோசிக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜப்பார் அவர்கள் குறிப்பிட்டர்கள் என்று கருதுகிறேன். செர்விஸ் ரெக்கார்டுகள் உடனடியாகக் கிடைக்காமல் போகிற காரணத்தால் அதிலே அதிகாரிகள் குழப்பிக்கொண்டு அந்த ரெக்கார்டு வரவில்லை, இந்த ரெக்காடு வரவில்லை என்ற காரணம் காட்டி ஓய்வூதியம் பெறத் தாமதம் ஏற்படுகிறது என்று சொன்னார்கள். நான் இந்த து அவைக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வேன் - செர்வீஸ் ரெக்கார்டுகள் உடனடியாகக் கிடைக்காமல் தாமதம் ஏற்பட்டாலும் ஆங்காங்கு இருக்கும் அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தாமல் கடைசியாக வேலை செய்த ஆண்டு செர்வீஸ் ரெக்காடு விவரங்கள் இருந்தால் அதை மாத்திரம் வைத்து 80 சதவிகித பென்ஷனை உடனடியாகக் கொடுத்துவிட வேண்டுமென்று அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வேன்.

இந்த மானியத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்ட இன்னொன்று புயல், வெள்ளம். இவைகளின் காரணமாக