பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

437


நம்முடைய மாநிலத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு எந்தெந்த வகையில் எல்லாம் நிவாரண உதவிகளை அளித்திருக்கிறது என்பதை நண்பர் காமாட்சி அவர்களும், நண்பர் வேழவேந்தன் அவர்களும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நிவாரணப் பணிகளுக்காக 1972-73-ம் நிதியாண்டில் 684 இலட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 1973-74-ம் ஆண்டில் 579 இலட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

புயல், வெள்ள நிவாரணத்திற்காக மாத்திரம் நாம் 1974-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாகவும், வீடு கட்ட உதவித் தொகையாகவும், உணவு வழங்க ஆகிய செலவும் 152 இலட்சம் ரூபாய் ஆகும்.

ம்

கடந்த வெள்ளத்தின்போது புயலின் காரணமாகவும், வெள்ளத்தின் காரணமாகவும், தென்னாற்காடு மாவட்டத்திலும் குறைந்த அளவுக்கு தஞ்சை மாவட்டத்திலும் மொத்தம் 13,000 ஏக்கர் நிலம் மண்மேடிட்டு விட்டது. நிலம் இருந்த இடமே தெரியவில்லை. அந்த அளவுக்கு ஆறுகள் எல்லாம் திசை மாறி பாய்ந்து நிலங்கள் மண்ணுக்குள்ளே போய்விட்டன. அந்த மண்ணை வாரிஎடுத்து மீண்டும் தாங்கள் பயிர் செய்த நிலங்களைக் காண்பதற்கு விவசாயிகள் அழுது புலம்பிய போது ஏற்கெனவே அதை விவசாயிகள் தாங்களே செய்து கொள்வதற்காக அரசு கருவிகளை அளிக்கும், அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொள்ளும் என்றும் நிலை போய், இன்றைக்கு அந்த 13,000 ஏக்கர் நிலத்திலும் மண்ணை வாரி மீண்டும் நிலத்தைக் கண்டுபிடித்து பயிர் செய்யப் பக்குவமாகக் கொடுக்க ஏக்கருக்கு 85 ரூபாய் செலவை இந்த அரசு தானாகவே ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு எந்தச் செலவும் வைக்காமல் முதல் முதலாக, இந்த மாநிலத்திலேயே, இந்தியாவிலேயே, முதல் தடவையாக விவசாயிகளுக்கு அந்தப் பேருதவியை இந்த அரசு செய்திருக்கிறது. (ஆரவாரம்).

அதை போலவே சிறிய நீர்ப்பாசன வசதிகளைச் சீர்படுத்தவும், பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் சாலைகளைச் சீரமைக்கவும் 532 இலட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.