பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


நடுத்தர நீர்நிலைகளைச் சீர்படுத்த 265 இலட்சம் ரூபாயும் பாதிக்கப்பட்ட கட்டடங்களை சீரமைக்க 9 இலட்சம் ரூபாயும், முனிசிபல் சாலைகளைச் சீர்படுத்த 38 இலட்சம் ரூபாயும், சென்னை மாநகராட்சி சாலைகளை சீரமைக்க 37 இலட்சம் ரூபாயும், விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட தக்காவிக் கடன்கள் வகையில் 145 இலட்சம் ரூபாயும், 1974 மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் செலவு 117 இலட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 13 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவழிக்கப் பட்டிருக்கிறது.

ல்

வீராசாமி அவர்கள் பேசுகின்ற நேரத்தில் சொன்னார்கள், இதற்காக 14 கோடி ரூபாயை மத்திய அரசிடத்தில் கேட்டபோது அவர்கள் முதலில் தருவதாக வாக்களித்தார்கள். நான் இந்த மன்றத்தில்கூடச் சொன்னதாக நினைவு. அப்போது மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். 14 கோடி ரூபாய் தருவதாக முதலிலே ஒப்புக்கொண்ட மத்திய அரசு அந்தத் தொகையைத் தரவில்லை. 4 கோடி ரூபாய் அளவுக்குத்தான் மத்திய அரசு நமக்கு இந்த வெள்ள நிவாரண நிதியை வழங்கிற்று என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இதைச் சொல்லும்போது ஏற்கெனவே ஒருமுறை 17 கோடி ரூபாயை வெள்ள நிவாரணத்திற்காக மத்திய ய அரசு தரவில்லையா என்று சில பேருடைய கண்கள் என்னைப் பார்த்துக் கேட்கின்றன. அது 1971-க்கு முன்பு.

1971-க்குப் பிறகு ஏற்பட்ட இந்த கொடிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக நாம் கணக்கிட்டுத்தந்த 14 கோடி ரூபாயைத் தருவதாக ஒத்துக் கொண்டு 4 கோடி ரூபாய்தான் அளித்திருப்பது என்பது வேதனைக்குரிய செய்தி என்று தெரிவித்துக்கொள்வேன்.

வெள்ள விபத்துக்களைப் போல தீ விபத்துக்கள் பற்றியும் இங்கே பேசப்பட்டது. குறிப்பாக குடியாத்தம் தீ விபத்து பற்றி இங்கே எடுத்துச் சொல்லப்பட்டது.

குடியாத்தம் தீ விபத்தில் பிரதமர் அவர்களும், தமிழக அரசும், மற்றும் பல்வேறு கட்சிகளும் எந்தளவிற்கு அக்கறை