பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

43

கொள்வார்கள் என்றால், நான் மிக மிகத் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன், சர்க்கார் காரியமாகப் போகும் போது கட்சி வேலைகள் செய்வது தவறா என்று கனம் அமைச்சர் அவர்கள் வாதிடக் கூடும். சர்க்கார் காரியமாக சுற்றுப்பயணம் போகிறார்கள் என்றால், அதற்காக செலவழிக்கப்படும் பணம், சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் இவைகள் எல்லோருடைய வரிப்பணத்தைப் பெற்றுதான் சர்க்கார் செலவு செய்கின்றது. எல்லோருடைய வரிப்பணத்தைப் பெற்றுத்தான் சர்க்கார் நடைபெறுகிறது. அவ்விதம் வருகின்ற வரிப் பணத்தைக் கொண்டு அதை செலவு செய்து - கட்சி வேலைகளை நடத்துவது என்றால், அது சரியானதல்ல, முறையானது அல்ல, நேர்மையானது அல்ல, என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன். அப்படியில்லாமல், சர்க்காருடைய காரியமாக வருகிற நேரத்தில் மந்திரிகளுடைய நிகழ்ச்சிநிரலில் - கனம் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ராமையா அவர்கள் சுற்றுப்பயணம் செய்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரல் - பலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தக் கோட்டையிலிருந்துதான் அனுப்பப்பட்டிருக்கிறது. 19-ம் தேதி இரவு 7-15க்குப் புறப்படுகிறார், மறுநாள் காலை 3-50க்கு தஞ்சாவூர் வருகிறார், 10 மணிக்கு மாவட்ட வளர்ச்சி கழகக் கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்களையும் எம்.பி-களையும் கலந்து பேசுகிறார் நான்கு மணிக்கு.

"Discussion with Members of District Congress Committee Presidents of Taluk and Town Congress Committees".

என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வரி று செலுத்துகின்றவர்களில் எல்லாக் கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள். நாங்கள் கொடுக்கின்ற - இந்த நாட்டு மக்கள் அனைவரும் கொடுக்கின்ற - வரிப்பணத்தை செலவு செய்து சுற்றுப்பயணம் செய்து கட்சி வேலைகள் செய்வது சரிதானா என்பதை நியாய உணர்ச்சியோடு கனம் அமைச்சர் அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது மட்டுமல்ல, மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்யும் போது, அவர்களுடைய பேச்சுக்களை எல்லாம் சுருக்கெழுத்தாளர்கள் எடுப்பதில்லை, அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள், அது சுதந்திரக்