பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

439


எடுத்துக்கொண்டு பொதுமக்கள் தங்களுடைய வள்ளல் தன்மையைக் காட்டியதன் வாயிலாக அந்த மக்களுக்கு போதிய நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாலும் மேலும் பல நிவாரணங்களை நிரந்தரமாக கையாள வேண்டும் என்ற கோரிக்கையை இங்கே பேசியவர்களும் குறிப்பிட்டார்கள்.

அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நண்பர் துரைசாமி அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இன்று நம் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நண்பர்களும் என்னிடம் ஒரு மனுவைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அவையில் இந்திரா கா ாங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, மற்ற எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதேபோன்ற முறையீடுகளைத் தந்து உடனடியாக நல்ல நிரந்தரமான வாரணத்தை அங்கு அளிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இதையும் சில பேர்கள் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அரசியல் கண்ணோட்டத்தோடு நடத்துவதற்கு முனைந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இரண்டு மதங்களுக்கிடையே சண்டைகளை வளர்த்துவிடலாம் என்ற ஒரு முயற்சி. அப்போது நான் சட்டசபையில் பேசும்போது சொன்னேன். ஒரு சிலயிடங்களில் பணம் கிடைக்கிறது என்பதற்காக மிகச் சாதாரணசிறிய குடிசைகளை தாங்களே கொளுத்திக்கொள்கிற சூழ்நிலையும் இருக்கிறது, அவர்களை நாம் எல்லாம் கண்காணிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். குடியாத்தத்தைத்தான் அப்படிச் சொன்னார்கள். குடியாத்தத்தில் உள்ளவர்கள்தான் அதைக் கொளுத்திக் கொண்டார்கள் என்று நான் சொன்னதாக பெரிய துண்டு அறிக்கைகள் எல்லாம்கூட வெளியிட்டு வீட்டுக்கு வீடு அவர்கள் வழங்கி வருவதாக திரு. லத்தீப், திரு. ஜப்பார், திரு. வகாப் போன்றோர் அங்குச் சென்று பார்த்தபோது அங்கு வீட்டில் உள்ளவர்கள் முதல் அமைச்சர் அவர்கள் இப்படிச் சொன்னார்களாமே, எங்களது குடிசைகளை நாங்களே கொளுத்திக்கொண்டோம் என்று

து