பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


சொன்னார்களே என்று கேட்டு, இவர்கள் நான் சட்டசபையில் சொன்னதை விளக்கிய பிறகு அவர்கள் ஆறுதல் பெற்றிருக் கிறார்கள்.

இதுபோல் மனிதாபிமானத்தோடு அணுகவேண்டிய காரியங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், அரசியல் வேடிக்கை விளையாட்டுக்கள் இவற்றிற்க்கு யாரும் இடம் தந்துவிடக்கூடாது.

அவர்களுக்கு மிக முக்கியமான தேவையாக இருப்பது தறிகள். அந்தத் தறிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு சைதாப்பேட்டைப் பகுதியிலும் காஞ்சிபுரத்திலும் உரிய முயற்சிகள் எல்லாம் இன்றைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன.

அவைகளன்னியில்

இன்னும் எந்தெந்த வகைகளில் அவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்பதைப்பற்றி ஆராய மாவட்ட ஆட்சித் தலைவருடைய தலைமையில் ஒரு குழு, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிற ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய முடிவுகளை அறிந்து அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளும் எடுக்கும் என்று நானே தெரிவித்துக்கொள்வேன்.

அதேபோல் விழுப்புரம் தீ விபத்து பற்றி ஜப்பார் அவர்கள் றி பேசினார்கள். அங்குப் பாதிக்கப்பட்டது 18 குடிசைகள். நிவாரணம் அளிக்கும்படி தென் ஆர்க்காடு மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் அதுபற்றிய அறிக்கை தரும்படி கேட்டிருக் கிறோம். அந்த அறிக்கை விரைவில் வந்ததும் ஆவன செய்யப் படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்வேன்.

வெள்ளம், தீ, இவைகள் அன்னியில் ஏற்கெனவே இந்த மன்றத்தில் 1969-ம் ஆண்டு நான் அறிவித்ததையொட்டி கடலில் மீன் பிடிக்கச் செல்கிற மீனவர்கள் காணாமல் போய்விடுவார்க ளானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் அரசின் சார்பில் நிதி வழங்கப்படும் என்று அறிவித்ததையொட்டி 1969 முதல் அந்த மானியம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அப்படி உதவிபெற்ற குடும்பங்களுடைய

எண்ணிக்கை 193.

அதை அறிவித்தபோது ஆயிரம் ரூபாய்தானே, நாலைந்து பேர்கள் சாவார்களா, இது என்ன பெரிய செலவு அரசுக்கு என்று கூடச் சொல்லப்பட்டது. ஆனால் 1.39 இலட்சம்