பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

441


ரூபாய் 139 குடும்பங்களுக்கு 69-க்குப் பிறகு அளிக்கப் பட்டிருக்கிறது.

அதேபோல் பனைமரத்தில் ஏறுகிறவர்கள் கீழே விழுந்து இறந்து விட்டால் அல்லது ஊனமுற்றால் அல்லது சிறு காயமுற்றால் என்று பிரித்து காதிஇலாகா வழியாக து அவர்களுக்குப் பண உதவி செய்யப்படும் என்று இந்த மன்றத்தில் நான் அறிவித்திருக்கிறேன்.

இறந்து போனால் அந்தக் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய், ஊனமுற்றால் ரூ. 500, சிறு விபத்து ஏற்பட்டால் ரூ.100 என்றும் நான் அறிவித்தேன். 31-3-74-ம் தேதி வரையில் அப்படி இறந்தவர்கள் 102 பேர்கள். பனை மரம் ஏறி கீழே விழுந்து இறந்தவர்கள் 102 பேர்கள். அவர்களுக்கு ரூ.1,02,000 வழங்கப்பட்டிருக்கிறது.

G

பெரும் விபத்துக்கள் காரணமாக 110 பேர்களுக்கு ரூ. 5,500-ம் சிறிய விபத்துக்களில் 23 பேர்கள், அவர்களுக்கு ரூ. 2,300 என்று ஆகமொத்தம் ரூ. 1,59,300 பனைமரத்தில் ஏறி கீழே விழுந்து இறந்தவர்கள், ஊனப்பட்டவர்களுடைய குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

திருமதி த.ந. அனந்தநாயகி : அடிக்கடி முதல் அமைச்சர் அவர்கள் பனைமரம், பனைமரம் என்று சொல்வதைப் பார்த்தால் வெறும் பனைமரம் ஏறி விழுபவர்களுக்கு மட்டும்தான் அந்த நஷ்டயீடா? தென்னை மரத்தில் ஏறி விழுந்தாலும் அந்த நஷ்டயீடு உண்டா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் அதை மரம் ஏறி என்று சொன்னால் மரத்தில் ஏறி விழுந்துவிட்டால், எல்லா மரங்களிலும் ஏறி விழுபவர்களும் கேட்பார்கள், ஆகவே பனைமரம் என்பதற்கு யாராவது விளக்கம் கேட்டால் தென்னை மரமும் சேருமா என்று கேட்டால் சொல்லலாம் என்றிருந்தேன். தென்னையும் சேரும்.

விடுதலைப் போராட்டவீரர்கள் பற்றி இங்கு நம்முடைய பெரியவர் மணலி அவர்களும், நண்பர் குருசாமி அவர்களும், திரு. பொன்னப்ப நாடார் அவர்களும் எடுத்துச் சொன்னார்கள்.