பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


ல்

பலமுறை இந்த மன்றத்தில் இந்த அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுடைய குடும்ப நலத்தில் எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதை என்பதை நான் எடுத்துச் சொல்லி யிருக்கிறேன்.

1-10-1966-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது விடுதலைப் போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை அறிவித்தது. அவர்கள் 1966-ல் ஐந்து பேர்களுக்குத்தான் அவர்களால் தர முடிந்தது. ஏனென்றால், 1-10-66-ல் இந்தத் திட்டத்தைத் தொடங்கிய காரணத்தால் ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் இருந்த சில மாதங்களில் ஐந்து பேர்களுக்கு அவர்கள் அளித்தார்கள்.

அதற்குப் பிறகு 1967-ல் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்ட பின் 1,254 பேர்கள்

1968-ல் 1,817பேர்கள்.

1969-ல் 1,742 பேர்கள்.

1970-ல் 1,914 பேர்கள்.

1971-ல் 453 பேர்கள்.

1972-ல் 290 பேர்கள்.

1973-ல் 313 பேர்கள்.

1974 பிப்ரவரி முடிய 27 பேர்கள். ஆக 7,815 பேர்களுக்கு இந்த மானியத் தொகை அளிக்கப்பட்டிருக்கிறது.

1966-67 நிதி ஆண்டில் ரூ.3,057 தான் அளிக்கப்பட்டது. ஆனால் 1974 வரையில் அந்தத் தியாகிகளுக்காக அளிக்கப்பட்ட மானியத்தினுடைய முழுத்தொகை ரூ. 2,72,23,022 என்பதிலிருந்து அந்த விடுதலை வீரர் களிடத்தில் இந்த அரசு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் அன்பும் பரிவும் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக எடுத்துச்சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதில் இன்னும் சில பேர்கள் இந்தத் தொகையைப் பெற இயலவில்லை என்று குறிப்பிடப்பட்டது. இந்த அரசு பொறுப் பேற்றுக்கொண்ட பிறகு இந்த மானியங்களுக்கான கடைசித் தேதியை பலமுறை ஒத்திவைத்து, ஒத்திவைத்து அவர்களுக்கு