பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

443


சலுகைகள் வழங்கியிருக்கிறது. இப்போது பரிசீலனையில் உள்ளவை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடத்தில் உள்ளவை 822 மனுக்கள், அரசிடம் உள்ள 1955 மனுக்கள்தான் இப்போது பரிசீலனையில் இருக்கின்றன. இதிலே சிலபேர்கள் சிறையில் இருந்ததற்கு ஆதாரங்கள் இல்லை. சில பேர்கள் சிறைச் சாலையிலிருந்து அவர்கள் தண்டனைக்காலம் முழுவதும் அனுபவிக்காமல் சென்றிருக்கிறார்கள்.

ம்

இப்படி பல்வேறு வகையான சங்கடங்கள் இதில் இருக்கிற காரணத்தால் இவர்களுக்கும்கூட உடனடியாக அவர்கள் வழங்கமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இருந்த அரசாங்கம் மூன்று மாதத்திற்குக் குறையாமல் தடுப்புக் காவல் அல்லது காவலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வரையறுத்திருந்தது.

ஆனால், அதில் மிகக் கண்டிப்பாக இந்த அரசு இல்லாமல் இரண்டு மாதங்களைக்கூட சிலநேரங்களில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு மூன்று மாதம் போட்டிருந்தால் நிச்சயமாக அனுபவித்திருப்பார்கள். நீதிபதி இரண்டு மாதம்தான் போட்டார்கள், ஆகவே அவர்கள் இரண்டு மாதம் சென்று அனுபவித்தார்கள் என்று அந்த வாதங்களை எல்லாம்கூட ஏற்றுக்கொண்டு பலருக்கு இந்த அரசு இந்த மானியங்களை வழங்கியிருக்கிறது என்று நான் எடுத்துச்சொல்வேன்.

1966 முதல் 1972 வரையில் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 50 மாதாந்திர மானியமாக வழங்கப்பட்டு, 25-வது ஆண்டு சுதந்திரதின வெள்ளி விழாவை முன்னிட்டு அதை ரூ. 75 ஆக நாம் மாற்றிக்கொடுத்திருக்கிறோம்.

அவர்களுக்கு மாத்திரமல்லாமல் இந்த மானியத் தொகை பெறுகிற தகுதியை பழைய அரசு வகுத்த வரைமுறைகளுக்குள் வராத வீரபாண்டிய கட்டபொம்மன் வழித் தோன்றல்களுக்கு 11-1-1971 முதல் மானியத்தொகை வழங்கி வருகிறோம் ஐந்து பேர்களுக்கு.

சென்னை என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கம் நாடார் அவர்களின் மனைவி செந்தியம்மாள்