பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


அவர்களுக்கு 26-1-1970 முதல் மாதம் ரூ. 150 அளித்து வந்தோம். பிறகு அந்த அம்மையார் அவர்கள் காலமாகிவிட்டார் என்று தெரிந்த பிறகு அது நிறுத்தப்பட்டது.

அரிய கலையின் மூலமாக விடுதலைப் போராட்டத்திற்கு ஊக்கமூட்டிய விஸ்வநாத தாஸ் அவர்களின் மகன் எஸ்.வி. காசி நாதன் மனைவி பிச்சையம்மாள், 2-வது மகள் வி. தங்கத்தாய், 3-வது மகன் எஸ்.எஸ். முத்தையா தாஸ் ஆகியோருக்கு 5-2-1972 முதல் அந்த வீர மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் மகள் ஆனந்த வல்லிக்கும், அவரது மகன் வ.உ.சி. ஆறுமுகம் அவர்களுக்கும் 20-10-1972 முதலும், 1-10-1973 முதலும் முறையே ம் அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

நம்முடைய சட்டமன்ற உறுப்பினர், பெரும் தியாகி, கோமதி சங்கர தீட்சிதர் அவர்களின் மகன் ஜி. மகாதேவன் அவர்களுக்கு 26-6-1971 முதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆகவே, இதிலே எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், கட்சி மாச்சரியங்கள் அணுவளவும் தலையிடுவதற்கு வழி இல்லாமல், இந்த அரசு இந்த மக்களின் உரிமைக்காகப் போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும், அவர்களுடைய குடும்பங்கள் வறுமையில் வாடக்கூடாது என்ற அக்கறையோடு இருந்து தொடர்ந்து செய்துவருகிறது.

இதன் தொடர்பாக நம்முடைய பொன்னப்ப நாடார் அவர்கள், கன்னியாகுமரி பகுதியில் தாய் தமிழகத்தோடு சேர வேண்டுமென்று போராடிய வீரர்களுக்கு எப்போது மானியம் அளிக்கப் போகிறீர்கள், அளிப்பதாகச் சொன்னீர்கள், ஒன்று கொடுப்பதாகச் சொல்லுங்கள், அல்லது இல்லை என்று இப்போதே சொல்லுங்கள் என்று அத்தனை ஆவேசத்தோடு பேசினார்.

கேட்கவேண்டியது நியாம்தான். அளிப்பதாகச் சொல்லி யிருக்கிறீர்கள். நன்றி, விரைவில் அளியுங்கள் என்று கேட்டு இருந்தால், இந்த அரசு இவ்வளவு காரியம் செய்து