பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

445


இருக்கிறது என்பதை மனமுவந்து பாராட்டுகிறார் என்று கொள்ளலாம். எதிர்க்கட்சியில் இருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக உண்டா, இல்லையா இப்போதே சொல்லி விடுங்கள் என்று கூறுவது, அதையும் அவர் கொஞ்சம் ஆத்திரத் தோடு சொல்லிவிட்டார்.

அவர் அப்படிச் சொன்ன காரணத்தால் நானும் கோபப்பட்டு இல்லை என்று சொல்லி விடமாட்டேன். இந்த அரசு குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு சேர வேண்டும் என்பதற்காக போராடிய வீரர்களை, அவர்களுடைய குடும்பங்களை காப்பாற்றும் என்று அளித்த உறுதியையும், அதே போன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு இறந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கும், வீரர்களுக்கும் மானியம் வழங்கும் என்று அறிவித்தோம் எந்தக் காரணத்தாலும் நிச்சயமாக பின் வாங்காது. கொள்கையில் தொடர்ந்து நிச்சயமாக அதைச் செய்யும் என்பதை மாத்திரம் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ல்

ஏற்கெனவே 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு ஆளாகி கொல்லப்பட்ட 53 பேரின் குடும்பங்களுக்கு இந்த அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,000 வீதம் சென்ற ஆண்டு o ம் என்று கருதுகிறேன் - கிட்டத்தட்ட 1 இலட்ச ரூபாய்க்கு மேல் அந்தக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல் தீக்குளித்து இறந்த அரங்கநாதன், வீரப்பன், முத்து, சண்முகம், சின்னசாமி, சிவலிங்கம், முத்து, மாணவர் தண்டபாணி, மாயூரம் சாரங்கபாணி ஆகிய 9 பேர்களின் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.100 வீதம் 1-4-72-லிருந்து வழங்க உத்தர விடப்பட்டு, அது வழங்கப்பட்டு வருகிறது.

து

மற்ற இந்தி எதிர்ப்பில் சிறை சென்றவர்கள், குமரி மாவட்டத்தில் சிறை சென்றவர்கள் தியாகத் தழும்புகளை ஏற்றுக் கொண்டவர்கள் நிச்சயமாக கவனிக்கப்படுவார்கள். விரைவில் அதற்கான முடிவுகள் எடுத்து இந்த அரசு அறிவிக்கும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திட்டக்குழு உறுப்பினர்கள் என்ன செய்து கெண்டிருக் கிறார்கள் என்று நம்முடைய மாண்புமிகு கே.டி.கே. தங்கமணி