பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


புகுத்த இயலுமா என்பதை நிச்சயமாக இந்த அரசு பரிசீலிக்கும் என்பதை நான் தெரிவித்துக்கொள்வேன்.

நண்பர் செழியன் அவர்கள் டெல்லியிலே ஒரு அதிகாரி செய்த தவறு பற்றி குறிப்பிட்டார்கள். புதுடெல்லியில் ஒரு அதிகாரி இருந்தார். அவர் காங்கிரஸ் ஆட்சி காலத்திலே அந்த அலுவலுக்கு அமர்த்தப்பட்டவர். தமிழ்நாடு இல்லத்தில் 74,000 சொச்ச ரூபாய். அவர் அதிகாரியாக இருந்தபோது பணம் காணவில்லை என்ற செய்தி கிடைத்தது. 1972-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 16-ம் நாளன்று அவர் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டு, பிறகு காணாமல் போன பணம் முழுவதும் அவர் திருப்பிக் கட்டிய பிறகு இப்போது அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. பணத்தைத் திருப்பிக் கட்டிவிட்டதால் அவர்

திருச்சியில் சுற்றுலா அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். விசாரணை முடிந்து விடவில்லை. எத்தனை நடவடிக்கை எடுக்கலாம் என்ற விஷயம் ஆராய்ச்சியில் இருக்கிறது என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊட்டியில் இருக்கிற அதிகாரி பற்றிச் சொன்னார்கள். அதுவும் மூடிவிடப்பட்ட புத்தகம் அல்ல. அது பற்றியும் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று நான் தெரிவித்துக்

கொள்வேன்.

நண்பர் பாலசுந்தரம் அவர்கள் பேசும்போது இந்த மானியக் கோரிக்கையில் ஜமீன் ஒழிப்புத் தொகை கோரியிருப்பதைப் பார்த்து, ஏதோ இந்த அரசு ஜமீன்தார்களுக்குப் பணம் வழங்குகிறது என்று கருதிக்கொண்டு, இந்தக் காலத்திலே அவர்களுக்கு வழங்க வேண்டுமா என்று கேட்டார்கள்.

ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 4-ம் நாள் வரையில் 4 சட்டங்கள் இயற்றப்பட்டு, ஜமீன் முறை ஒழிப்பு சட்டத்தின்படி அவர்களுக்குச் சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகை, அதை ஒவ்வொரு ஆண்டும் சிறுகச் சிறுக கொடுத்துக்கொண்டு வருகிறோம். அதிலே சில