பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

449


தாகை

பேர் நீதிமன்றத்தில் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையிலே இதுவரையில் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் அளவுக்கு அவர்களுக்கான இழப்பீட்டுத் ெ அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பணம் இந்த மானியத்தில் இழப்பீட்டுத் தொகையாக கேட்கப்பட்டிருக்கிறதே அல்லாமல் த வேறு அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர்கள் ள் ஊரிலேயே இருப்பதில்லை என்று சொன்னார்கள். பத்திரிகையில் நாளைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஊரிலேயே இருப்பதில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்று செய்திகள் வரலாம். இந்தப் புள்ளிவிரத்தைப் பார்த்தால் அமைச்சர்கள் அதிக நாட்கள் சென்னையில் தங்கி அலுவல்களைப் பார்த்தார்களா அல்லது சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார்களா என்ற உண்மை தெரியும்.

முதல் அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 1973-74-ல் 287 நாட்கள். வெளியூர் சென்ற நாட்கள் 78.

கல்வி அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 282. வெளியூர் சென்ற நாட்கள் 83.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 303. வெளியூர் சென்ற நாட்கள் 62.

பின்தங்கிய நலத்துறை அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 300. வெளியூர் சென்ற நாட்கள் 65.

அரிசன நலத்துறை அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 286. வெளியூர் சென்ற நாட்கள் 79.

பொதுப்பணித்துறை அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 261. வெளியூர் சென்ற நாட்கள் 104.

தொழில் அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 263. வெளியூர் சென்ற நாட்கள் 102.

வருவாய்த் துறை அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 287. வெளியூர் சென்ற நாட்கள் 78.