பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


அந்தஸ்தை நினத்துக்கொண்டு பயப்படுகிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். அப்படி பயந்தார்களா என்றால் இல்லை.

ஆகவே, அவர்களுடைய வாதம் அடிபட்டுப்போகிறது என்று நான் கருதுகிறேன். அப்படி அமைச்சர்கள் பயமுறுத்தவும் இல்லை, மக்கள் பயப்படவும் இல்லை. எதிர்க்கட்சியில் இருக்கிற பொறுப்பான தலைவர்கள், விளம்பரப்பட்டுள்ள தலைவர்கள், அதிக மக்கள் கூட்டத்தைச் சேர்க்கும் தலைவர்கள் அவர்களுக்கு எப்படி அமைச்சர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்படுகிறதோ அதைப்போன்று போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கும் தரப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ச்

பிற மாநிலத்திலிருந்து இன்னொரு அமைச்சர் வந்தது மாத்திரமல்ல. வாதத்திற்காகக் அதைக்கூட விட்டுவிடுகிறேன். நடைபெறுகிற எல்லா தேர்தல்களும் மத்திய சர்க்கார் அமைச்சர்கள் இங்கே வந்து போகிற நேரத்தில், இங்கே பணியாற்றுகிற நேரத்தில், மாநில அமைச்சர்கள் மட்டும் கையை கட்டிக்கொண்டு, சி. சுப்பிரமணியமா வரட்டும், திண்டுக் கல்லுக்கு ஜகஜீவன்ராமா வரட்டும், சவானா வரட்டும், என்று இருக்க முடியுமா? பக்கத்திலிருக்கிற முதல் அமைச்சர், மைசூர் முதல் அமைச்சர் வந்திருக்கிறார். அண்மையில் மறைந்து விட்டார், ஒரு அமைச்சர், ஒரு முஸ்லீம் அமைச்சர் அவர்கள்கூட வந்திருக்கிறார்கள்.

இப்படி பல அமைச்சர்கள் பல மாநிலங்களிலிருந்து வருகிறார்கள். முதல் அமைச்சர்கள்கூட வருகிறார்கள்.

அது மாத்திரமல்ல, மத்திய சர்க்காரினுடைய காபினட் மினிஸ்டர்ஸ் கூட வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ல்

இன்னொன்றும் நான் சொல்லிக்கொள்கிறேன். தமிழ்நாட்டு முதல் அமைச்சரோ அல்லது கர்நாடக முதல் அமைச்சரோ, ஆந்திர முதல் அமைச்சரோ, பஞ்சாப் முதல் அமைச்சரோ தேர்தல் பிரசாரத்திற்குச் செல்கிறார்கள் என்றால், அவர்கள் தங்களுடைய கட்சி செலவில், சொந்த செலவில்தான் செல்ல வேண்டும். அது விதி. மற்ற மாநிலங்களில் அந்த விதி