பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

453


மீறப்படுகிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் கட்சிக் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள் என்றால்கூட, தேர்தல் பிரச்சாரம் மாத்திரமல்ல, கட்சிக் கூட்டங்களுக்குச் செல்லுகிற பொழுதுகூட, அந்தத் தொகையை, அந்த வழிச்செலவை கட்சிதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு விதியை வகுத்து, முதல் அமைச்சரும், மற்ற அமைச்சர் பெருமக்களும் அதைக் கடுமையாக இன்றைக்குக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஆனால், பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் எந்த மாநிலத்திற்குத் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்றாலும், அந்தச் செலவை அவர்கள் அபிஷியல் பங்ஷனுக்கு வருகிற செலவு மாத்திரம் அல்ல, ஒரு கட்சிக் கூட்டத்தில் போய் கலந்து ல் கொண்டாலும் அந்தச் செலவை அந்தந்த மாநில சர்க்கார்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு விதிமுறை செய்யப்பட்டு, எல்லா மாநில அரசுகளுக்கும் அந்த விதிமுறையும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் அவர்கள், மத்திய சர்க்காருடைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களாக இருந்தாலும் சரி, இனி வரப்போகும் னி பிரதமராக இருந்தாலும் சரி, அவர்கள் கலந்துகொள்கின்ற கூட்டங்களுக்கு, கட்சிக்கூட்டங்களாக இருந்தாலும், அந்தச் செலவையெல்லாம் அந்தந்த மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விதியை செய்திருக்கிறார்கள்.

ல்

இதற்கிடையே இடைத் தேர்தலில் நம்முடைய மாநிலத்தில் அமைச்சர்கள் சென்று பிரச்சாரம் செய்வது தவறு என்று கூறுவதில் பொருத்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்

இந்தப் பல்வகை மானியக் கோரிக்கைகளிலே கிட்டத்தட்ட 94 கோடி ரூபாய் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த மானிய கோரிக்கைகளின் மீது உரிய கருத்துக்கள் பலவற்றை வழங்கிய எல்லா கட்சி உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைக் கூறி, வெட்டுத் தீர்மானங்களை யெல்லாம் திரும்பப்பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த அளவில் அமைகிறேன்.