பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


உரை : 34

நிதி ஒதுக்கீடு மசோதா

நாள் : 21.12.1974

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, இந்த நிதி மதிப்பீடுகள் விவாதத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல துணை மதிப்பீடுகளின் பெயருக்கு ஏற்ப இந்த மதிப்பீடுகளைத் துணையாகக்கொண்டு இதில் சொல்லப் பட்டிருக்கிற விவரங்களுக்குள் ஆழமாகச் செல்லாவிட்டாலும் அவரவர்களுடைய தொகுதிப் பிரச்சினை குறித்தும், ஆங்காங்கு நடைபெறவேண்டிய வேலைத் திட்டங்கள் குறித்தும், இருக்கின்ற குறைபாடுகளை எவ்வாறு களைய வேண்டுமென்பது குறித்தும், அதிகாரிகள் சிலர் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்; அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டுமென்பது குறித்தும், வேறுசில பொதுவான நிலை குறித்தும் மாண்புமிகு உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

ல்

துணை

நம்முடைய நண்பர் திரு. லத்தீப் அவர்கள் பேசிய நேரத்தில் நம்முடைய சமூக நலத் திட்டங்கள் மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிற இந்தத் திட்டங்கள் வரவேற்கக்கூடியவை என்று கூறிவிட்டு இந்தத் திட்டங்களால் வருமானக் கூறுகள் - சமுதாயத்திற்கு பொருளாதாரத் துறையில் அரசாங்கத்தின் சார்பில் அமையக்கூடிய அந்தக் கூறுகள் குறைவாக இருக்கின்றன. அவைகளை மேம்படுத்த வேண்டுமென்ற ஒரு நல்ல கருத்தை எடுத்துச்சொன்னார்கள்.

இந்தத் திட்டங்களை, உற்பத்தி ஆதாரங்களை மையமாக வைத்து, இன்றைக்கு நாம் செயல்படுத்தி வருகின்றோம். எடுத்துக்காட்டாகச் சொல்வேண்டுமேயானால், ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டத்தில் அவர்களுக்கென ஒரு பயிற்சித் தொழிற்சாலையை அமைப்பதும் ஒன்றாகும். அண்மையிலே முட்டுக்காடு என்கின்ற பகுதியில், மாமல்லபுரம் செல்லும் பாட்டையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று