பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


வீடுகளின் பெறுமானம் ரூபாய் மூவாயிரமாகவும், மூவாயிரத்து ஐநூறு ரூபாயாகவும், சில இடங்களில் மூவாயிரத்து எழுநூறு ரூபாயாகவும் அமைகிறது. அது ஆங்காங்கு அடித்தளங்கள் அமைக்க வேண்டியதைப் பொறுத்து சில இடங்களில் பள்ளமாக விருப்பதை மேடாக ஆக்க வேண்டியதைப் பொறுத்து, அந்தத் தொகை அளிக்கப்படுகிறதேயல்லாமல், நாம் தனிப்பட்ட முறையில் அந்தத் தொகை வழங்குவதில்லை.

ஆங்காங்கு வாரியத்தின் சார்பில் நாம் வீடுகள் கட்டுகிறோம். ஏதோ பத்தாயிரம் வீடுகள் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை என்று திருமதி சத்தியவாணிமுத்து இங்கே கூறினார். அது தவறான தகவல். ஏனென்றால், கடந்த 15-2-1974இல் தொடங்கப் பட்ட இத்திட்டத்தின்படி டிசம்பர் திங்களோடு பத்தாயிரம் வீடுகளைக் கட்டி அரிசன மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதிலே விழா நடத்தி, தொடங்கி வைக்கப்பட்ட வீடுகளுடைய எண்ணிக்கைக் குறைவாக இருக்கலாம். பத்தாயிரம் வீடுகளைத் தொடங்கி வைக்கிற விழாவினை, நிகழ்ச்சியினை நடத்த இயலவில்லையென்பதற்காக அந்த வீடுகளே கட்டப்படவில்லை என்று கூறுவது சரியல்ல. இந்தத் திங்களில் 10,000 வீடுகளும் அந்த 10,000 வீட்டுக்குரிய அரிசன மக்களுக்கும் வழங்கப்பட விருக்கின்றன. தொடர்ந்து நான்கைந்து மாதக் காலத்திற்குள் மேலும் 30,000 வீடுகள் கட்டுவதற்கு வாரியத்தினால் திட்டங்கள் தீட்டப்பட்டு அந்த வேலைகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. 1975-ஆம் ஆண்டிற்குள்ளாக, ஒரு இலட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டுமென்று வாரியம் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுடைய பெற்றோர்களுடைய ஆண்டு வருமான வரம்பு ரூ. 2,500-லிருந்து ரூ. 3,000-ஆ உயர்த்தப்பட்டிருப்பது பெரிதும் இந்த அவையில் வரவேற்கப் பட்டது என்றாலும், அமைச்சராக இருந்த சத்தியவாணிமுத்து அவர்கள் ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டது, 1967-லேயே, அண்ணா காலத்திலேயே என்று குறிப்பிட்டார்கள். பெற்றோர்களுடைய வருமான வரம்பு ரூ. 1,500 ஆக இருந்ததை, ரூ. 2,000 ஆக அரிசன மக்களுக்கு மாத்திரம்தான் அண்ணா அவர்கள் 1967-இல் உயர்த்தினார் என்றும், ஆனால் அப்போது