பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


ரூ.2,000 ஆக்கப்பட்டது. அது பிறகு அரிசன மக்களுக்கு ரூ. 2,500 ஆக்கப்பட்டது பின்தங்கியவர்களுக்கு ரூ. 2,000 அப்படியே இருந்தது. இப்பொழுது, அரிசன மக்களுக்கு ரூ. 2,500 என்று இருப்பது, ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது பின்தங்கிய மக்களுடைய வருமானம் ரூ. 2,000 என்பது ரூ. 2,500 ஆக க உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆகவே, பின்தங்கிய மாணவர்கள் என்றால் ஒரு அலர்ஜி வரக்கூடாது. எப்படி தாழ்த்தப்பட்டவர்கள் சமுதாயத்திலே தாழ்த்தப்பட்டிருக்கிறார்களோ, அதைப்போலவே தான், பின்தங்கியவர்களும் சமுதாயத்திலே தாழ்த்தப் பட்டிருக்கிறார்கள்.

ம்

இங்கே துரைமுருகன் தெரிவித்த மாதிரி, நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டபொழுதே, நான் உறுதியாகத் தெரிவித்தேன், என்னுடைய வாழ்நாளில், நான் பொறுப்பிலே இருக்கிற நேரத்தில், எந்தக் காலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், பின்தங்கிய மக்களுக்காகவும் பாடுபட உழைப்பதற்கு உறுதி எடுத்துக்கொள்வேன் என்றுதான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் நான் தெரிவித்தேன். ஆகவே, இப்படிப்பட்ட திசை திருப்பப்படுகின்ற காரியங்களால் நான் சிறிதளவும் பின்தங்கியவர்களுக்குச் செய்கின்ற காரியங்களிலிருந்து பின்வாங்க மாட்டேன். அதே போல், தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுவதிலிருந்தும் பின்வாங்க மாட்டேன்.

பென்ஷன்

பெரியவர் மணலி அவர்கள் இங்கே ஒன்றைச் சொன்னார்கள். சத்திரம் டிபார்ட்மெண்டில் தரவேண்டுமென்று உத்தரவிட்டும் செயல்படவில்லையென்று சொன்னார்கள். உத்தரவிடப்பட்டதும் உண்மை, செயல்படாததும் உண்மை. இடையிலே நடந்தது என்னவென்றால், சத்திரம் டிபார்ட்மெண்டிலே பணம் இல்லாததால், அரசாங்கத்தை அந்தச் செலவை ஏற்கும்படியாக, தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டிருக்கிறார். 14-11-1974இல் அரசாங்கம் அதை ஒத்துக் கொண்டு இப்பொழுது உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே, அந்தப் பணம் உடனடியாக வழங்கப்படும் என்றும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய பேருந்துப் போக்குவரத்துக் கழகங்களைப் பற்றி திரு. பொன்னப்பட நாடார் அவர்கள் எடுத்துச்சொல்லி